Friday, May 1
Shadow

இயக்குநர் ரிஷிகேஷ் முகர்ஜி மறைந்த தினம் இன்று

புகழ்பெற்ற இந்தித் திரைப்பட இயக்குநர் ஆவார். இவரது முதன்மையான திரைப்படங்களாக சத்தியகாம், இச்சுப்கே இச்சுப்கே, அனுபமா, ஆனந்த், அபிமான், குஃட்ஃடி, கோல் மால், ஆசீர்வாத், பவார்ச்சி, கிசி சே ந கேஹ்னா, நமக் அராம் அமைந்திருந்தன.

இருசி-டா எனப் பரவலாக அறியப்பட்டவரின் நாற்பதாண்டுத் திரைவாழ்வில் 42 திரைப்படங்களை இயக்கியுள்ளார். தமது சமூகத் திரைப்படங்களுக்காக புகழ்பெற்றிருந்த இருசி-டா இந்திய திரைப்படத்துறையின் பகட்டான மசாலா படங்களுக்கும் மெய்நிகரான கலைப்படங்களுக்கும் இடைப்பட்ட மத்திய சினிமாவின் முன்னோடி என அறியப்பட்டார்.

இந்தியத் திரைப்படத் தணிக்கை குழுவின் (CBFC) தலைவராகவும் தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் (NFDC) தலைவராகவும் விளங்கினார். 1999இல் இவருக்கு இந்திய அரசு தாதாசாகெப் பால்கே விருது வழங்கியது; 2001இல் பத்ம விபூசண் விருது பெற்றார். எட்டு பிலிம்பேர் விருதுகள் பெற்ற இருசி-டாவிற்கு 2001இல் என்டிஆர் தேசிய விருது வழங்கப்பட்டது.