Wednesday, October 28
Shadow

ஆணவக்கொலைக்கு எதிராக உடனடியாக சட்டம் இயற்று”அரசுக்கு இயக்குனர் பா.இரஞ்சித் கோரிக்கை

உலகத்திலே கேவலமான வன்மம் ஜாதிய வன்மம் தான். இதுவரை நம்நாடு எத்தனையோ ஆணவக்கொலைகளை கண்டிருக்கிறது. கெளரவம் என்ற இல்லாத ஒன்றை இருப்பதாய் ஊட்டப்பட்ட வெறியை உள்ளுக்குள் ஏற்றிக்கொண்டு பல மிருகங்கள் நாடெங்கும் வலம் வந்து அப்பாவி இளம் ஜோடிகளை வதம் செய்து வருகிறது. இதற்கு எதிராக ஒடுக்கப்பட்டவர்களின் குரல் தான் முதலில் ஒலிக்கிறது. தற்போது கிருஷ்ணகிரியில் ஒரு இளம் ஜோடியை கொலை செய்திருக்கிறார்கள் ஜாதி வெறியர்கள். இதைக்கண்டித்து இயக்குனர் பா.ரஞ்சித் அரசுக்கு ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார். அவர் “தமிழக அரசே உடனடியாக ஆணவ படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்று” என்று பதிவிட்டுள்ளார்

இன்று ஓசூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இயக்குனர் பா.இரஞ்சித் மற்றும் பகுஜன் சமாஜ்வாதி கட்சி, விடுதலைசிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு இந்த ஆணவக்கொலையில் ஈடுபட்ட கொலையாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.