Wednesday, April 22
Shadow

பசங்க இயக்குனர் பாண்டிராஜ் பிறந்த தினம்

தமிழ்த் திரைப்பட இயக்குனரான இவர் சசிகுமாரின் தயாரிப்பில் கடந்த 2009ல் இயக்கிய பசங்க திரைப்படம் பெரும் வெற்றி படமாக அமைந்தது. அடுத்து 2010ல் அருள்நிதியை கதாநாயகனாக வைத்து வம்சம் திரைப்படமும், சிவகார்த்திகேயனை கதாநாயகனாக வைத்து மெரினா திரைப்படமும் இயக்கினார். மெரினா திரைப்படத்தில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருந்தார்.

தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இவர், சென்னை வந்த புதிதில் இயக்குனர் கே. பாக்கியராஜிடம் ஆபிஸ் பாயாக வேலை பார்த்தவர். அந்த நாட்களில் பல சிறுகதைகளை அவர் எழுதியுள்ளார். பல்வேறு தடைகளை தாண்டி இயக்குனர் சேரனிடம் உதவி இயக்குனராக இணைந்து பணியாற்றினார். பின்னர் தங்கர்பச்சான் மற்றும் சிம்பு தேவனுடன் ஆறு படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

இயக்கிய படங்கள்

பசங்க

வம்சம்

மெரினா

கேடி பில்லா கில்லாடி ரங்கா

மூடர் கூடம்

கோலி சோடா

இது நம்ம ஆளு

தயாரித்த படங்கள்

மெரினா
கேடி பில்லா கில்லாடி ரங்கா
மூடர் கூடம்

வசனம் எழுதிய படம்

கோலி சோடா

பசங்க படத்திற்காக இவர் பெற்ற விருதுகள்

சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது

சிறந்த திரைக்கதைக்கான தேசியத் திரைப்பட விருது

விஜய் விருதுகள் (இந்த ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்பு)

விஜய் விருதுகள் (சிறந்த பாத்திரமைப்பு)

பரிந்துரை-சிறந்த தமிழ் இயக்குனருக்கான பிலிம்பேர் விருது

பரிந்துரை-விஜய் விருதுகள் (சிறந்த இயக்குநர்)

பரிந்துரை-விஜய் விருதுகள் (சிறந்த கதை,
திரைக்கதை எழுத்தாளர்)