Wednesday, October 28
Shadow

சமூக வலைதளங்களில் மனம் புண்படும்படி விமர்சிக்காதீர்கள் – 2.0 இசை வெளியீட்டில் ரஜினிகாந்த்

ஷங்கர் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் மிக பிரமாண்ட முறையில் உருவாகி வரும் படம் 2.0. இப்படத்தின் இசை வெளியீடு துபாயில் பிரம்மாண்டமாக நேற்று துபாயில் நடந்தது

இந்தியாவில் இப்படி ஒரு படம் இனி வருமா என்பது கூறமுடியாது. ஆனால் ஷங்கரால் நிச்சயம் அது முடியும். நாமே 2.0 ஹாலிவுட்டை மீறிய படம் என கூறிக்கொள்வது தண்டோரா அடிப்பது போல் உள்ளது. படம் பார்த்த பிறகு அதை நீங்கள் உணர்வீர்கள்”.

கடவுள் தன் பக்கம் இல்லை என்றால், நான் இவ்வளவு வெற்றிகளைப் பெற்றிருக்க முடியாது. இளைஞர்கள் வாழ்க்கையில் இன்புற வேண்டுமென்றால், நமது கலாச்சாரத்தையும், மரபையும் புரிந்துகொள்ள வேண்டும்.மேலும், நல்ல படங்களை ஆதரியுங்கள். நல்ல கலைஞர்களை உற்சாகப்படுத்துங்கள். படம் சுமார் என்றோ, நன்றாக இல்லை என்றோ சோசியல் மீடியாவில் விமர்சிக்காதீர்கள். விமர்சிப்பதை தவிர்த்துவிட்டு, திரைத்துறையை இளைஞர்கள் மதிக்க வேண்டும்.இவ்வாறு ரஜினி பேசினார்.

Leave a Reply