
தமிழகத்தின் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் “டோரா”இந்த படம் வரும் 31ம்தேதி ரிலீஸ் என்பதால் கடந்த வாரம் இந்த படம் சென்சாருக்கு சென்றது அதில் இந்த படத்துக்கு A சான்றிதழ் கொடுக்கப்பட்டது . இதற்கு படத்தின் தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக் அவரே அதற்கு ஒன்றும் சொல்லவில்லை ஆனால் காதல் படுத்தும் பாடு பாருங்க நயன்தாரா காதலர் இதற்கு சென்சர் போர்ட்யை விமர்சித்துள்ளார்.
இந்நிலையில், ‘டோரா’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் அளித்ததற்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் தணிக்கை குழுவை மறைமுகமாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘டோரா’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ். துருவங்கள் பதினாறு, மாநகரம் படங்களுக்கு ‘யுஏ’ சான்றிதழ். ஆனால், சமீபத்தில் வெளிவந்த சில படங்களுக்கு மட்டும் ‘யு’ சான்றிதழ். சென்சார் போர்டு மீதான காதல் தினம் தினம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்று கூறியுள்ளார்.

நயன்தாராவும்-விக்னேஷ்சிவனும் காதலர்களாக வலம் வந்துகொண்டிருப்பதாக கோலிவுட் ஒரு செய்தி பரவி வருகிறது. இருவரும் ஒரே வீட்டில் குடித்தனம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இரண்டு பேரும் தாங்கள் காதலர்கள்தான் என்பதை இதுவரை வெளிப்படையாக கூறவில்லை. இருப்பினும், இதுபோன்ற சம்பவங்கள்தான் அவர்களின் நெருக்கத்தை அவ்வப்போது சுட்டிக்காட்டி வருகிறது. இவர் இந்த படத்துக்காக சென்சார் போர்ட்யை விமர்சித்துள்ளார் இதனால் இவர் இயக்கும் சூர்யா படத்துக்கு சென்சார்க்கு செல்லும் போது நிச்சயம் எதுவும் பிரச்சனை வரமால் இருந்தால் சரி காதலிக்காக பேசுகிறேன் என்று அடுத்தவர்களுக்கு இடைஞ்சல் பண்ணிடதிங்க. ஐயா
