சற்றும் கலங்காமல் என் கழுத்தை நெரித்தார் நயன்தாரா : ‘டோரா’ பட வில்லன் வெற்றி!
அண்மையில் வெளியாகியுள்ள 'டோரா' படத்தில் அமானுஷ்ய சக்தி மூலம் பழிவாங்கப் படும் மூன்று வில்லன்களில் ஒருவராக நடித்திருப்பவர் நடிகர் வெற்றி. படத்தில் அவர் பாணிபூரி விற்பவராக வருகிறார்.
சினிமாவில் பதினேழு ஆண்டுகாலப் போராட்டம் இவருடையது.
அப்படிப் போராடியே பல படங்களில் சில வினாடிக் காட்சிகள் ,நிமிடக் காட்சிகள் என்று தோன்றியுள்ளார். இப்படி நடித்து முன்னேறிய பின் சற்றே முகம் காட்டும் வேடங்களில் சில படங்களில் அடையாளம் பெற்றுள்ளார்.
'டோரா' படம்தான் இவரை ஒரு முழு வில்லன் முகமாக 'தண்டோரா' போட்டுச் சொல்லியிருக்கிறது.
திரையரங்கு போய்ப் பார்த்த போதெல்லாம் 'அவனைக் கழுத்தை நெரிச்சுக் கொல்லு' என்றும் 'போட்டுத் தள்ளு' என்றும் படத்தில் நயன்தாரா பொங்கி எழும் காட்சிகளில் எல்லாம் ரசிகர்கள் தன்னை மறந்து 'அவன் சாகணும் ' ,'அவன் சாகணும் ' என ஆரவாரிக்கும் போது.. அவை தனக்கு விழுந்த வசவுகள் அல்ல ...