Friday, September 11
Shadow

சென்னையில் களைகட்டிய “I Am Game” விழா: செப்டம்பர் 3 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ்!

சென்னையில் களைகட்டிய “I Am Game” விழா: செப்டம்பர் 3 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ்!

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படமான “I Am Game”, வரும் செப்டம்பர் 3, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற தமிழ் பதிப்பிற்கான பிரம்மாண்ட முன் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்டு ரசிகர்களுடன் உற்சாகத்தை பகிர்ந்துகொண்டனர்.

பான்-இந்தியா அளவில் ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழி ரசிகர்களை சென்றடையும் வகையில் படக்குழு பல்வேறு நகரங்களில் தீவிரமான புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

சென்னை நிகழ்ச்சியில் நடிகர்கள் துல்கர் சல்மான், கதிர், ஆண்டனி வர்கீஸ், நடிகை சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு, “I Am Game” படத்தில் பணியாற்றிய அனுபவங்களையும் படத்தின் சிறப்பம்சங்களையும் பகிர்ந்துகொண்டனர்.

“டிரெய்லரில் பார்த்ததை விட படத்தில் அதிக சர்ப்ரைஸ் உள்ளது” – கதிர்

நடிகர் கதிர் பேசுகையில், “I Am Game வழக்கமான திரைப்பட அனுபவமாக இருக்காது. டிரெய்லரில் ரசிகர்கள் பார்த்ததைத் தாண்டி படத்தில் பல ஆச்சரியங்கள் உள்ளன. ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் வகையில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக படத்தின் ஒளிப்பதிவு ரசிகர்களை கவரும் முக்கிய அம்சமாக இருக்கும்,” என்றார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், “இந்தப் படத்தில் நான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக நடித்துள்ளேன். உண்மையில் இதற்கு முன்பு கிரிக்கெட் விளையாடிய அனுபவம் எனக்கு மிகவும் குறைவு. பள்ளி நாட்களில் பேட் கிரிக்கெட் விளையாடியதுடன் எனது அனுபவம் முடிந்துவிட்டது. அப்படிப்பட்ட என்னை கிரிக்கெட் கேப்டனாக நடிக்க வைத்த இயக்குநரின் தைரியம் பாராட்டத்தக்கது.

இந்தப் படத்திற்காக கிரிக்கெட்டை புதிதாகக் கற்றுக்கொண்டேன். அந்த அளவிற்கு இந்தக் கதாபாத்திரத்திற்காக அதிக உழைப்பை செலுத்த வேண்டியிருந்தது. படத்திற்குப் பின்னால் மிகப்பெரிய உழைப்பும் நம்பிக்கையும் இருக்கிறது. குறிப்பாக புதிய கதைகள் மற்றும் வித்தியாசமான முயற்சிகளில் தைரியமாக முதலீடு செய்யும் துல்கர் சல்மானின் சினிமா மீதான ஆர்வம் மிகவும் ஊக்கமளிக்கிறது,” என்றார்.

“கதை கேட்ட உடனேயே நடிக்க வேண்டும் என முடிவு செய்தேன்” – சம்யுக்தா விஸ்வநாதன்

நடிகை சம்யுக்தா விஸ்வநாதன் பேசுகையில், “சிறு வயதிலிருந்தே சினிமாவை ரசித்து வளர்ந்தவள் நான். ஒரு திரைப்படம் பார்க்கும் போது அது நமக்குள் ஏற்படுத்தும் தாக்கமும் உணர்வும் எனக்கு மிகவும் முக்கியமானது.

‘I Am Game’ படத்தின் கதையை இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் முதன்முறையாக கூறியபோதே, இந்தப் படத்தில் நிச்சயம் நடிக்க வேண்டும் என்று உடனடியாக முடிவு செய்தேன். எனது கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமானதாகவும், மனதிற்கு நெருக்கமானதாகவும் இருந்தது,” என்றார்.

மேலும், “ஹைதராபாத்தில் நடைபெற்ற நீண்ட படப்பிடிப்பு எனக்கு ஒரு சிறந்த பயிற்சியைப் போன்ற அனுபவமாக அமைந்தது. குறுகிய நேரத்தில் ஒரு காட்சிக்குத் தேவையான உணர்வை வெளிப்படுத்துவது சவாலாக இருந்தாலும், அது எனது நடிப்புப் பயணத்தில் நிறைய கற்றுத்தந்தது.

துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்தது மறக்க முடியாத அனுபவம். படத்தில் பல கதாபாத்திரங்கள் இருந்தாலும், படப்பிடிப்பு முடிவில் நாங்கள் அனைவரும் ஒரு குடும்பமாக மாறிவிட்டோம். டிரெய்லரில் ரசிகர்கள் சில கதாபாத்திரங்களை மட்டுமே பார்த்திருப்பார்கள். முழுப் படத்தைப் பார்க்கும்போது படக்குழுவின் உழைப்பும் ஒற்றுமையும் ரசிகர்களுக்கு புரியும்,” என்றார்.

“துல்கர் என் நெருங்கிய நண்பர்” – ஆண்டனி வர்கீஸ்

நடிகர் ஆண்டனி வர்கீஸ் பேசுகையில், “சென்னையில் நடைபெறும் எனது முதல் நிகழ்ச்சி இது. ‘I Am Game’ படத்தின் தமிழ் விளம்பர நிகழ்ச்சிக்காக இங்கு வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ் ரசிகர்கள் என்னை எப்படி வரவேற்பார்கள் என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன். இந்தப் படத்திற்கு தமிழ் ரசிகர்கள் தங்களது ஆதரவை வழங்க வேண்டும்,” என்றார்.

துல்கர் சல்மான் குறித்து அவர் கூறுகையில், “துல்கர் சல்மான் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல, அழகான மனம் கொண்ட தயாரிப்பாளர் மற்றும் மிகச்சிறந்த மனிதர். அவர் எனது நெருங்கிய நண்பர். அவருடன் பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

இயக்குநர் நஹாஸ் ஹிதாயத்தும் எனது நெருங்கிய நண்பர். படப்பிடிப்பின்போது எங்களுக்குள் இருந்த நட்பும் நகைச்சுவையான தருணங்களும் இந்தப் பயணத்தை மறக்க முடியாத அனுபவமாக மாற்றியது. எனது கதாபாத்திரம் பற்றி இப்போது அதிகம் சொல்ல முடியாது. ஆனால் படத்தைப் பார்க்கும்போது ரசிகர்களுக்கு அது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்,” என்றார்.

“என் தயாரிப்பு நிறுவனத்தின் மிகப்பெரிய படம் இது” – துல்கர் சல்மான்

நிகழ்ச்சியில் பேசிய துல்கர் சல்மான், “சென்னைக்கு வரும்போதெல்லாம் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை நேரடியாகச் சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். ஒரு படம் உங்களுக்குப் பிடித்திருந்தால், நீங்கள் நிச்சயம் அதற்கு ஆதரவு அளிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு,” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “‘I Am Game’ படத்தைப் பார்க்கும்போது அது ஒரு தமிழ் திரைப்படத்தைப் பார்க்கும் உணர்வையும் ரசிகர்களுக்கு ஏற்படுத்தும். படத்தில் ஏராளமான திறமையான தமிழ் நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர்.

Wayfarer Films தயாரிப்பு நிறுவனத்தின் இதுவரையிலான படங்களில், மிகப்பெரிய பட்ஜெட்டிலும் பிரம்மாண்டமான அளவிலும் உருவாக்கப்பட்ட படம் இதுதான்,” என்றார்.

படத்தில் நடித்துள்ள கதிர் குறித்து துல்கர் சல்மான் பேசுகையில், “கதிர் மிகவும் இயல்பாகவும் தீவிரமாகவும் நடித்துள்ளார். அவரது கதாபாத்திரத்திற்கு தேவையான நம்பகத்தன்மையை மிகச்சிறப்பாக திரையில் கொண்டு வந்துள்ளார்,” என்றார்.

மிஷ்கின் குறித்து அவர் கூறுகையில், “மிஷ்கின் இந்தப் படத்தின் மிக முக்கியமான அங்கம். அவரிடம் இருக்கும் உற்சாகமும் எனர்ஜியும் அபாரமானது. இன்றைய இளம் தலைமுறையினரிடமே கூட அந்த அளவிலான ஆற்றலை பார்ப்பது அரிது,” என்றார்.

சம்யுக்தா விஸ்வநாதனுக்கு இந்தப் படம் முக்கியமான திருப்புமுனையாக அமையும் என்றும், ஆண்டனி வர்கீஸ் பெப்பே இப்படத்தின் முக்கிய பலங்களில் ஒருவர் என்றும் துல்கர் சல்மான் தெரிவித்தார்.

காமெடி முதல் கேமிங் வரை அனைத்து அம்சங்களும் கொண்ட கமர்ஷியல் என்டர்டெய்னர்

“I Am Game” குறித்து மேலும் பேசிய துல்கர் சல்மான், “இந்தப் படம் முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது. காமெடி, ரொமான்ஸ், மர்மம், சஸ்பென்ஸ், ஆக்ஷன், த்ரில்லிங் மற்றும் கேமிங் என ரசிகர்களை கவரும் பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

ஜேக்ஸ் பிஜாயின் இசையில் இந்தப் படம் ரசிகர்களை கவரும் ஹிட் ஆல்பமாக இருக்கும். ஏற்கனவே வெளியான பாடல்களைத் தாண்டி, படத்தில் மேலும் பல சிறப்பான பாடல்கள் உள்ளன,” என்றார்.

துல்கர் சல்மானின் 40-வது திரைப்படம்

Wayfarer Films நிறுவனம் சார்பில் துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து தயாரித்துள்ள “I Am Game”, துல்கர் சல்மானின் திரைப்பயணத்தில் 40-வது திரைப்படம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.

நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ள இந்தப் பிரம்மாண்ட ஃபேண்டஸி த்ரில்லர் திரைப்படத்தின் திரைக்கதையை சஜீர் பாபா, இஸ்மாயில் அபு பக்கர் மற்றும் பிலால் மொய்து ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.

வசனங்களை சஜீர் பாபா, ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் ஷபாஸ் ரஷீத் ஆகியோர் எழுதியுள்ளனர்.

துல்கர் சல்மானுடன் ஆண்டனி வர்கீஸ், நடிகரும் இயக்குநருமான மிஷ்கின், காயாது லோஹர், கதிர், பார்த் திவாரி மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஜிம்ஷி காலித் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாமன் சாக்கோ படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். அஜயன் சாலிசேரி கலை இயக்கத்தை கவனித்துள்ளார்.

படத்தின் அதிரடியான ஆக்ஷன் காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்ஸ் வடிவமைத்துள்ளனர். படத்தின் இசை உரிமையை Zee Music நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

மலையாள சினிமாவில் புதிய அனுபவத்தை தரும் ஃபேண்டஸி த்ரில்லர்

மலையாள சினிமாவில் இதுவரை ரசிகர்கள் பார்த்திராத வகையிலான ஸ்டைலிஷ் ஃபேண்டஸி த்ரில்லர் அனுபவத்தை வழங்கும் வகையில் “I Am Game” உருவாகியுள்ளது.

ஏற்கனவே வெளியான டிரெய்லர் மற்றும் முதல் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தற்போது நடைபெற்றுள்ள சென்னை முன் வெளியீட்டு விழா படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

துல்கர் சல்மான் ஸ்டைலிஷ் மற்றும் மாஸ் தோற்றத்தில் நடித்துள்ள இந்தப் பிரம்மாண்ட திரைப்படம், ஐந்து மொழிகளில் பான்-இந்தியா அளவில் வெளியாகிறது.

“I Am Game” திரைப்படம் செப்டம்பர் 3, 2026 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

தொழில்நுட்பக் குழு

தயாரிப்பு: Wayfarer Films
தயாரிப்பாளர்கள்: துல்கர் சல்மான், ஜோம் வர்கீஸ்
இயக்கம்: நஹாஸ் ஹிதாயத்
லைன் புரொட்யூசர்: பிபின் பெரும்பில்லி
ஒளிப்பதிவு: ஜிம்ஷி காலித்
இசை: ஜேக்ஸ் பிஜாய்
எடிட்டிங்: சாமன் சாக்கோ
புரொடக்ஷன் ஹெட்ஸ்: சுஜாய் ஜேம்ஸ், தேவதேவன்
புரொடக்ஷன் டிசைனர்: அஜயன் சாலிசேரி
ஆக்ஷன்: அன்பறிவ் மாஸ்டர்ஸ்
மேக்கப்: ரோனெக்ஸ் சேவியர்
காஸ்ட்யூம்: மஷார் ஹம்சா
புரொடக்ஷன் கன்ட்ரோலர்: தீபக் பரமேஸ்வரன்
அசோசியேட் இயக்குநர்: ரோஹித் சந்திரசேகர்
பாடல்கள்: மனு மஞ்சித், விநாயக் சசிகுமார்
VFX: தௌஃபீக் (Eggwhite)
போஸ்டர் டிசைன்: Ten Point
சவுண்ட் டிசைன்: Sync Cinema
சவுண்ட் மிக்ஸ்: கண்ணன் கணபதி
ஸ்டில்ஸ்: SBK
மார்க்கெட்டிங் ஹெட்: விஜித் விஸ்வநாதன்
மக்கள் தொடர்பு: யுவராஜ்

 

Dulquer Salmaan’s ‘I Am Game’ Grand Pre-Release Event Held in Chennai; Film Set for Worldwide Release on September 3

The grand pre-release event of Dulquer Salmaan’s much-anticipated film I Am Game was held in Chennai ahead of its worldwide theatrical release on September 3, 2026.

The makers are currently carrying out extensive promotional activities across different languages and regions as the film gears up for a pan-India release. As part of the Tamil promotions, the cast and crew came together in Chennai to interact with the media and share their experiences of working on the ambitious project.

The event witnessed the presence of Dulquer Salmaan, Kathir, Antony Varghese, Samyuktha Viswanathan and other members of the team.

“There Are Many More Surprises Beyond the Trailer” – Kathir

Actor Kathir said that I Am Game will offer audiences a completely different cinematic experience.

I Am Game has several surprising elements. There is much more to the film than what audiences have seen in the trailer. Every scene has been carefully designed to offer viewers a unique experience. The cinematography will also be one of the film’s major highlights,” he said.

Kathir, who plays a cricket captain in the film, also spoke about preparing for the role.

“I had very little experience playing cricket before this film. Apart from playing bat cricket during my school days, I had never really played the sport seriously. I was surprised by the director’s confidence in casting me as a cricket captain. I had to learn cricket specifically for this film and put in a lot of effort for the character,” he shared.

He further appreciated Dulquer Salmaan’s passion for cinema and willingness to support fresh and unconventional stories.

“There is tremendous hard work and belief behind this film. Dulquer Salmaan’s interest in cinema and his willingness to take risks with new stories and different attempts is truly inspiring. We hope audiences will support I Am Game when it releases on September 3,” Kathir added.

“I Decided to Be Part of the Film the Moment I Heard the Story” – Samyuktha Viswanathan

Actress Samyuktha Viswanathan revealed that she immediately connected with the film when director Nahas Hidayath narrated the script to her.

“Having grown up watching and enjoying cinema, the emotional impact a film creates on me has always been important. When director Nahas Hidayath first narrated the story of I Am Game, I immediately decided that I wanted to be a part of it,” she said.

Speaking about her character, she added, “My role in the film is very different and emotionally close to me. The long shooting schedule in Hyderabad was like an intensive learning experience. Having to deliver the required emotions for a scene within a short period was challenging, but it taught me a great deal about acting.”

Samyuktha also described working with Dulquer Salmaan as a memorable experience.

“Although the film features a large number of characters, by the end of the shoot, we had all become like one big family. Audiences may have seen only a few characters in the trailer, but when they watch the complete film, they will understand the unity and hard work of the entire team,” she said.

“Dulquer Is a Wonderful Producer, Actor and Friend” – Antony Varghese

Actor Antony Varghese expressed his happiness about attending his first event in Chennai.

“This is my first event in Chennai, and I am very happy to be here for the Tamil promotions of I Am Game. I am eagerly looking forward to seeing how Tamil audiences receive me. I hope everyone will support the film when it releases on September 3,” he said.

Speaking about Dulquer Salmaan, Antony Varghese said, “Dulquer is a wonderful producer, a major actor and, most importantly, a great human being and a close friend. It was a खुशी to work with him.”

He also spoke about his friendship with director Nahas Hidayath.

“Nahas is a close friend of mine, and working with him was a lot of fun. The friendship and humorous moments we shared during the shoot made this experience unforgettable. I cannot reveal much about my character at this point, but audiences will have a special experience when they watch the film,” he added.

“The Biggest Production from Wayfarer Films So Far” – Dulquer Salmaan

Addressing the gathering, Dulquer Salmaan said that he always looks forward to interacting directly with the media whenever he visits Chennai for a film promotion.

“Whenever I come to Chennai to promote a film, I make it a point to meet the press and media friends directly and share details about the film. I have always believed that if you genuinely like a film, you will support it,” he said.

Dulquer added that Tamil audiences would feel a strong connection to I Am Game.

“When audiences watch I Am Game, they may feel like they are watching a Tamil film because the movie features several talented Tamil actors. This is also the biggest-budget and most ambitious production made by our company, Wayfarer Films, so far,” he said.

Praising his co-stars, Dulquer Salmaan said Kathir had delivered a highly natural and intense performance.

“Kathir has performed with great authenticity and intensity. He has brought a strong sense of credibility to his character,” he said.

Dulquer also praised filmmaker and actor Mysskin, describing him as an important part of the film.

“Mysskin is a major strength of this project. The enthusiasm and energy he brings are extraordinary. It is rare to find that kind of energy even among today’s younger generation,” he added.

He further stated that I Am Game could prove to be an important turning point in Samyuktha Viswanathan’s career and described Antony Varghese Pepe as one of the film’s major strengths.

“Antony Varghese is already a leading actor in Malayalam cinema, and he has made an impressive contribution to this film as well. I am confident that Tamil audiences will also celebrate him,” Dulquer said.

A Complete Commercial Entertainer

Talking about the film’s genre and entertainment value, Dulquer Salmaan said that I Am Game has been designed as a complete commercial entertainer.

“The film has comedy, romance, mystery, suspense, action, thrilling moments and gaming elements. It offers several ingredients that can appeal to audiences across different sections,” he said.

He also praised composer Jakes Bejoy’s music, stating that the film has the potential to deliver a successful soundtrack.

“Beyond the songs that have already been released, there are several more exciting tracks in the film that audiences will enjoy,” he added.

Dulquer Salmaan’s Landmark 40th Film

Produced under the banner of Wayfarer Films by Dulquer Salmaan and Jom Varghese, I Am Game is one of the biggest films in Dulquer Salmaan’s career and also marks his milestone 40th feature film.

The stylish fantasy thriller has been directed by Nahas Hidayath. The screenplay has been jointly written by Sajeev Baba, Ismail Abu Bakar and Bilal Moidu, while the dialogues have been written by Sajeev Baba, Adarsh Sukumaran and Shabas Rasheed.

The film features an ensemble cast including Antony Varghese, actor-filmmaker Mysskin, Kayadu Lohar, Kathir, Parth Tiwari and Samyuktha Viswanathan in prominent roles.

The music has been composed by Jakes Bejoy, while Jimshi Khalid has handled cinematography. The editing is by Shaman Chacko, with Ajayan Chalissery serving as the production designer.

The action sequences have been choreographed by Anbariv Masters. Zee Music has acquired the music rights of the film.

A Stylish Fantasy Thriller on a Grand Scale

Positioned as a stylish fantasy thriller unlike anything previously seen in Malayalam cinema, I Am Game promises to offer audiences a visually ambitious and entertaining theatrical experience.

The trailer and first song released from the film have already generated a positive response among audiences. The Chennai pre-release event has further increased anticipation surrounding the project ahead of its theatrical debut.

With Dulquer Salmaan appearing in a stylish and mass-oriented avatar, the film has generated considerable excitement among fans.

I Am Game will release in Malayalam, Tamil, Telugu, Hindi and Kannada, making it a major pan-India release.

The film is set to hit theatres worldwide on September 3, 2026.

Technical Crew

Production Banner: Wayfarer Films
Producers: Dulquer Salmaan and Jom Varghese
Director: Nahas Hidayath
Line Producer: Bipin Perumbilli
Cinematography: Jimshi Khalid
Music: Jakes Bejoy
Editor: Shaman Chacko
Production Heads: Sujay James and Devadevan
Production Designer: Ajayan Chalissery
Action: Anbariv Masters
Make-up: Ronex Xavier
Costumes: Mashar Hamsa
Production Controller: Deepak Parameswaran
Associate Director: Rohith Chandrasekhar
Lyrics: Manu Manjith and Vinayak Sasikumar
VFX: Taufiq (Eggwhite)
Poster Design: Ten Point
Sound Design: Sync Cinema
Sound Mix: Kannan Ganapathy
Stills: SBK
Marketing Head: Vijith Viswanathan
Public Relations: Yuvaraj