Saturday, April 18
Shadow

தன் மீதான விமர்சனங்களுக்கு ஏக்தா கபூர் விளக்கம்…

ராணுவ வீரர்களை அவமதிக்கும் விதமாக வெப் சீரிஸ் எடுத்ததாக தயாரிப்பாளர் ஏக்தா கபூர் மீது மேலும் ஒரு வழக்கு பாய்ந்துள்ளது.
ஏக்தா கபூர் தயாரிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள வெப் சீரிஸ் ‘ட்ரிபிள் எக்ஸ் 2’.தணிக்கை செய்யப்படாது வெளியாகியுள்ள இந்த தொடரில் ராணுவ வீரர்களை அவமதிப்பது போன்ற ஆபாச காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
நாட்டிற்காக ராணுவ வீரர் ஒருவர் எல்லையில் பணியாற்றி வரும் வேளையில் அவரின் மனைவி, கணவர் இல்லாத நேரத்தில் வேறொரு ஆணுடன் பழக்கம் கொள்வது போல ஆபாசமாக காட்டப்பட்டுள்ளது. மேலும் அசோக சக்கரத்தின் முத்திரையுடன் உள்ள ஒரு ராணுவ உடையை கிழிப்பது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

இது குறித்து ட்ரிப்புள் எக்ஸ் தொடரின் தயாரிப்பாளர் ஏக்தா மீது இந்தி பிக்பாஸ் புகழ் ஹிந்துஸ்தானி பாஹூ வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் தியாகிகள் நல அறக்கட்டளை தலைவரும் முன்னாள் ராணுவ வீரருமான மேஜர் டி.சி.ராவும் தற்போது தயாரிப்பாளர் ஏக்தா கபூர் மீது புதிய வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.இது குறித்து பேசியுள்ள அவர்,  “ராணுவ வீரர்கள் இந்த நாட்டுக்காக உயிர்த் தியாகங்களைச் செய்து வருகிறார்கள். ஆனால், இந்தத் தொடரின் தயாரிப்பாளரும் இயக்குநரும் இந்தத் தொடரில் ராணுவ வீரர்களின் குடும்பப் பெண்களைத் தவறான முறையில் சித்தரித்துள்ளனர். இது ராணுவத்தினரை அவமதிக்கும் செயலாகும். இது கடும் கண்டனத்துக்குரியது” என தெரிவித்துள்ளார்.

மேலும் சீருடையில் இருக்கும் ராணுவ வீரர்களை அவமதிப்பது போன்ற காட்சிகள் நீக்கப்பட வேண்டும் எனவும் இல்லையென்றால் ஏக்தா கபூர் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதே போன்று தமிழில் உருவாகியுள்ள ‘காட்மேன்’ எனும் வெப் சீரிஸ் பிராமணர்களை அவமதிக்கும் வகையில் உள்ளதாக அதன் இயக்குநர் மீது வழக்கு தொடரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தன் மீது எழுந்துள்ள விமர்சனங்களுக்கு நடிகை ஏக்தா கபூர் , சோபா டே உடனான விவாதத்தின் போது விளக்கம் அளித்துள்ளார்.
இந்த விவாதத்தின் போது சோபா டே, அண்மையில் ஏக்தா கபூர் சமூக வலைதளங்களின் மூலம் சந்தித்து வரும் விமர்சனங்கள் குறித்து கேள்வி எழுப்பினார். இந்தியாவில் உள்ள தனிநபராக இருந்தாலும், ஒரு நிறுவனமாக இருந்தாலும் இந்திய ராணுவத்திற்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும்  என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர்,  ராணுவ வீரர்கள், நம் நாட்டை பாதுகாப்ப எடுத்து வரும் பணிகள் மகத்தானது. விமர்சனத்துக்கு உள்ளான படக் காட்சிகளை நாங்கள் ஏற்கனவே நீக்கி விடடோம். இதன் மூலம் எங்கள்  தரப்பில் இருந்து எடுக்க வேண்டிய நடவடிக்கை எடுத்து விட்டோம். இந்நிலையில், தொடர்ந்து என் மீது விமர்சனம் செய்வதும், என்னை கற்பழித்து விடுவதாக மிரட்டல் விடுப்பதும், எந்த விதத்திலும் நியாயமில்லை என்றார்.
இந்த வீடியோவில், நடிகை ஏக்தா கபூர், தன் பக்க நியாயத்தை விலக்கியதுடன், எதிர்காலத்தில், இதே போன்று மற்ற பெண்கள் பாதிக்கப்பட்ட வாய்ப்புள்ளது என்றும், அதனால், இதுபோன்று பெண்களுக்கு மிரட்டல் விடுக்கும் செயல் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட வேண்டும் என்றும் தெளிவாக கூறியுள்ளார்.
 இந்த பிரச்னையை தன்னம்பிக்கை உடனும், மன உறுதியுடனும் எதிர் கொண்ட ஏக்தா கபூரை பார்த்து நாங்கள் பெருமை கொள்கிறோம் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஏக்தா தற்போது சாதாரண பெயராக இருந்தாலும், அவர் எங்களுக்கு அதிகளவிலான தகவல்களை கொடுத்துள்ளார். நேர்மையான மற்றும் கண்ணியமான பெண்ணின் மீது இதுபோன்ற விமர்சனங்கள் கூறுவது இதயத்த்தில் மிகப்பெரிய வலியை ஏற்படுத்துகிறது.
உண்மையான பெண்கள், அனைத்து விஷயத்திலும் சிறப்பாகவே செயல்படுகின்றனர்.