தன் மீதான விமர்சனங்களுக்கு ஏக்தா கபூர் விளக்கம்…
ராணுவ வீரர்களை அவமதிக்கும் விதமாக வெப் சீரிஸ் எடுத்ததாக தயாரிப்பாளர் ஏக்தா கபூர் மீது மேலும் ஒரு வழக்கு பாய்ந்துள்ளது.
ஏக்தா கபூர் தயாரிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள வெப் சீரிஸ் ‘ட்ரிபிள் எக்ஸ் 2’.தணிக்கை செய்யப்படாது வெளியாகியுள்ள இந்த தொடரில் ராணுவ வீரர்களை அவமதிப்பது போன்ற ஆபாச காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
நாட்டிற்காக ராணுவ வீரர் ஒருவர் எல்லையில் பணியாற்றி வரும் வேளையில் அவரின் மனைவி, கணவர் இல்லாத நேரத்தில் வேறொரு ஆணுடன் பழக்கம் கொள்வது போல ஆபாசமாக காட்டப்பட்டுள்ளது. மேலும் அசோக சக்கரத்தின் முத்திரையுடன் உள்ள ஒரு ராணுவ உடையை கிழிப்பது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
இது குறித்து ட்ரிப்புள் எக்ஸ் தொடரின் தயாரிப்பாளர் ஏக்தா மீது இந்தி பிக்பாஸ் புகழ் ஹிந்துஸ்தானி பாஹூ வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் தியாகிகள் நல அறக்கட்டளை த...
