

ஐஸ்வர்யா ராய் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் விரைவில் குணமடைய முன்னாள் காதலரான விவேக் ஓபராய் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகர்களான அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது ஐஸ்வர்யா ராய் மற்றும் அவருடைய மகள் ஆராத்தியா பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவுடன், அமிதாப்பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அரசியல் கட்சி பிரபலங்கள், முன்னணி நடிகர்கள், தொழில்துறை பிரபலங்கள் என்று பலரும் அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் குணமடைய வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து அமிதாப் பச்சன் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் வெளியான முடிவுகளின்படி ஐஸ்வர்யாராய் மற்றும் அவர்களுடைய மகள் ஆராதியாவிற்க்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அபிஷேக் பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார், அதில்: ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆராத்யாவிற்க்கும் கொரோபா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது, இதனால் அவர்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள உள்ளனர். இவர்களைப்பற்றி மும்பை மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, அவர்கள் தேவையான உதவிகளை செய்வார்கள்.
என் அம்மாவிற்கும் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் கொரோனா தொற்று இல்லை. உங்கள் அனைவருடைய பிரார்த்தனைகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி என்று அதில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராயின் முன்னாள் காதலரான விவேக் ஓபராய் தனது ட்விட்டர் பக்கத்தில்: ஐஸ்வர்யா ராய் மற்றும் அவர்களது குடும்பம் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
