
தமிழ் சினிமாவின் பயங்கர பிஸி நடிகர் அதோடு வெற்றி நடிகன் என்றால் அது சிவகார்த்திகேயன் என்று சொல்லலாம் படத்துக்கு படம் ரசிகர்கள் பட்டாளத்தை அதிகபடுத்தும் சிவகார்த்திகேயன் திழ் சினிமாவின் ராசி நடிகர் என்று பெயர் அனால் இவருக்கு ஒரு ராசியான ஒருவர் உண்டு அவருடன் இவர் நடித்தால் படங்கள் மிக பெரிய வெற்றியை தரும்.
தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி தன்னுடைய நகைச்சுவை கலந்த நடிப்பால் இன்று ரசிகர்கள் மத்தியில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக அஜித் விஜய்க்கு அடுத்த இடத்தை பிடித்திருப்பவர் சிவகார்த்திகேயன்.
இவர் தற்போது பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா என்ற படத்தில் சமந்தாவுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். இந்த படத்தில் தற்போது கீர்த்தி சுரேஷ் கௌரவ வேடத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இதனை கீர்த்தி சுரேஷும் ட்வீட் செய்து உறுதி செய்துள்ளார். ஏற்கனவே சிவாவும் கீர்த்தியும் ரெமோ, ரஜினி முருகன் ஆகிய படங்களில் ஒன்று சேர்ந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
