
இவர் தமிழ்நாட்டின் சென்னையில் 1963ல் பிறந்தவர். மலையாளத் திரைப்படத்துறையில் புகழ்பெற்ற இவர், கன்னடத் திரைப்பட நடிகரான அம்பரீஷை திருமணம் செய்து கொண்டார். தற்போது பெங்களூரில் வசிக்கின்றார். இவர் இருநூறிற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்குத் திரைப்படங்கள், மலையாளத் திரைப்படங்கள், கன்னடத் திரைப்படங்கள் மற்றும் இந்தித் திரைப்படங்கள் ஆகியவற்றில் நடித்துள்ளார்
ரஜினியுடன் முரட்டுக் காளை, கழுகு படங்களில் நடித்த இவர், கரையெல்லாம் செண்பகப்பூ, திசைமாறிய பறவைகள், ஒரு ஓடை நதியாகிறது என்பது உள்பட பல தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். 80களில் புகழ் பெற்ற நடிகையாக இருந்த சுமலதா தெலுங்கு, கன்னட படங்களிலும் கொடி கட்டி பறந்தார். கன்னட நடிகர் அம்ப்ரீஷ் பூரியை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு சிறிது காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார்.

இப்போது சுமலதா கன்னட படங்களில் அம்மா, அண்ணி வேடங்களில் நடித்து வருகிறார். இதுபோல் தமிழ் படங்களிலும் நடிக்க விரும்புகிறார்.
இவர் நடித்த தமிழ் திரைப்படங்கள்
கரையெல்லாம் செண்பகப்பூ, குடும்பம் ஒரு கதம்பம், முரட்டுக் காளை , ஒரு ஓடை நதியாகிறது

