Tuesday, February 11
Shadow

ஜெயம் ரவியை கலாய்த்து பிரபல நடிகை

ஜெயம் ரவி நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் கோமாளி. அவரது 24 படமான இந்த கோமாளியை பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறார். இந்த படத்தில் 9 விதமான வேடங்களில் நடிக்கிறார் ஜெயம்ரவி. அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே மற்றும் யோகிபாபு உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் போஸ்டர்களை கடந்த 9 நாட்களாக வெளியிட்டு வந்தார்கள்.

post

அதில் ஒரு போஸ்டரில் பள்ளி மாணவன் கெட்டப்பில் தோன்றுகிறார் ஜெயம்ரவி. இதற்காக 20 கிலோ வெயிட் குறைத்து நடித்துள்ளார். அதைப்பார்த்த அவரது அண்ணனான டைரக்டர் மோகன்ராஜா, ஜெயம் படத்தில் பார்த்த ரவி போல் உள்ளது என்று டுவிட் செய்திருந்தார்.

அதையடுத்து ஜெயம் ரவிக்கு ஜோடியாக சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் நடித்த ஜெனிலியாவும் அந்த போஸ்டரைப் பார்த்து விட்டு, “உங்களுக்கெல்லாம் வயதே ஆகாதா. 2008ம் ஆண்டு சந்தோஷ் சுப்ரமணியத்தில் பார்த்த அதே இளமையான ஜெயம் ரவியாக இப்போதும் உள்ளீர்கள்” என்று ஜாலியாக ரவியை கலாய்த்துள்ளார் ஜெனிலியா