Thursday, October 29
Shadow

நடிகை த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம்

தமிழ் சினிமாவில் ’96’ படம் மூலம் மீண்டும் முன்னணிக்கு வந்துள்ளவர் நடிகை த்ரிஷா. அவர், நடித்து அடுத்து வெளிவந்த ‘பேட்ட’ படமும் வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது ‘ராங்கி, பரமபதம் விளையாட்டு’ மற்றும் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் சாட் செய்த போது ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு , “சிங்கிள், ஆனால் தேர்வு செய்துவிட்டேன்’ என்றும், ‘தேவைப்படும் போது செய்யுங்கள், தேவைப்படாத போது வேண்டாம்’ என்றும் பதிலளித்திருந்தார்.

இதனால், த்ரிஷா அவருடைய திருமணத்திற்காக யாரையோ தேர்வு செய்துவிட்டார் என்று தகவல் பரவி வருகிறது. த்ரிஷாவும் 35 வயதைக் கடந்துவிட்டார். 2015ல் அவருக்கும், தொழிலதிபரான வருண்மணியனுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்று பின்னர் திருமணம் கைவிடப்பட்டது.

தற்போது சில படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் த்ரிஷா, ரசிகர்களுக்கு அளித்த பதில் மூலம் விரைவில் திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருக்கிறார் எனத் தெரிகிறது.