
மலையாள நடிகரான பக்ரு (எ) அஜய் குமார் முழுநீளப் படத்தில் நடித்த மிகக் குள்ளமான நடிகர் என்ற சாதனைக்காக ஏற்கனவே கின்னஸில் இடம் பிடித்தவர். தற்போது ‘குட்டியும் கோலும்’ என்ற படத்தை இயக்கியதன் மூலம் உலகிலேயே மிகவும் குள்ளமான இயக்குனர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆகிறார். தமிழை விட, மலையாளத்தில் மிகவும் பிஸியான காமெடி நடிகரான இவர் தற்போது குட்டியும், கோலும் என்ற முழுநீள திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
மிகவும் உயரம் குறைவான நடிகரான பக்ரு, ஜீவா நடித்த டிஷ்யூம், விஜய் நடித்த காவலன், சூர்யா நடித்த ஏழாம் அறிவு போன்ற படங்களில் நடித்தவர்.
மலையாளப் படமான ‘குட்டியும் கோலும்’ உலகிலேயே மிகவும் உயரம் குறைவாக உள்ள இயக்குனர் பக்ருவால் இயக்கப்பட்டுள்ளது.இப்படத்தை இயக்கியதற்காக பக்ரூவுக்கு கின்னஸ் விருது வழங்கப்பட உள்ளது. நவம்பர் 8, 2012ல் இந்தப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.
மிமிக்ரி கலைஞனாக தன் வாழ்க்கைப் பயணத்தை தொடங்கிய 2 அடி 6 இன்ச் உயரமுள்ள பக்ரு இன்று அடைந்திருப்பதோ கின்னஸ் சாதனையை.
இவர் நடித்த படங்கள்: ஆரியன், 7ம் அறிவு, காவலன், அற்புத தீவு, டிஷ்யும்
