Friday, January 17
Shadow

வயல்பகுதியில் அறுவடை செய்து பிரச்சாரம் மேற்கொண்ட நடிகை

இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 18 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் தங்களின் ஆட்சியை கைப்பற்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர பிரச்சரம் செய்து வருகிறது. இந்நிலையில், மதுரா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரான நடிகை ஹேமாமாலினி வயல்பகுதியில் அறுவடை செய்துக் கொண்டிருந்த உழைக்கும் பெண்களை சந்தித்து வாக்கு சேகரித்த ஹேமா மாலினி தாமும் வயல்காட்டில் இறங்கி அறுத்த கோதுமை கதிர்களை கைமாற்ற உதவி செய்த சம்பவம் அனைவரையும் கவர்ந்துள்ளது. மதுரா தொகுதியில் இரண்டாவது கட்டமாக தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.