
இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் வெளிவந்த ஆம்பள திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி.இதற்கு பிறகு சில இசையமைத்திருந்தார்.பிறகு சுந்தர்.சி தயாரிப்பில் ஆதி இசையமைத்து இயக்கி நடித்து வெளிவந்த திரைப்படம் மீசைய முறுக்கு.
சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மீசைய முறுக்கு படம் அதிக வசூல் செய்து பெரிய அளவில் வெற்றி பெற்றது.இதற்கு பிறகு இவருக்கு பல வாய்ப்புகள் தேடி வந்தது.இவர் அடுத்து நடிக்கும் படத்தை புதுமுக இயக்குனர் பார்த்திபன் இயக்குகிறார்.
இந்த படத்தில் ஆதி ஹாக்கி விளையாட்டு வீரராக நடிப்பதால் இவர் ஹாக்கி விளையாட்டு கற்றுவருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் இரண்டு மாதங்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
