
1990களில் குமார் ,பாலிவுட்டின் அதிரடி படங்களான கிலாடி (1992),மோஹ்ரா (1994) மற்றும் சப்ஸே படா கிலாடி (1995)ஆகிய படங்களிலும் மற்றும் ‘கிலாடி தொடர்வரிசைகளிலும் நடித்தார், இவர் யே தில்லாகி (1994) மற்றும் டாட்கன் (2000) போன்ற காதல் படங்களிலும், அதேபோல ஏக் ரஸ்தா (2001) போன்ற நாடக படத்திலும் நடித்து தன் திறமையை நிரூபித்துக் காட்டினார். குமார் பிறகு நகைச்சுவைப் படங்களிலும் நடித்தார். அவரது நகைச்சுவை நடிப்புத்திறனை ஹேரே பேரி (2000),முஜ்ஜேஸே ஷாதி கரோகி ( 2004),கரம் மசாலா (2005) மற்றும் ஜான்-இ-மான் (2006) படங்களில் தொடர்ச்சியாக வெளிப்படுத்தினார்.2008ல், கனடா, ஆண்டாரியோவில் அமைந்து உள்ள விண்ட்சர் பல்கலைக் கழகம், அவருக்கு சட்டத் துறையில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. அது அவரின் இந்தியத் திரைத்துறைக்கு அளித்த மகத்தான பங்களிப்புக்குரிய அங்கீகாரமாகும்.2009ல், அவர் இந்திய அரசாங்கத்தாரால் பத்மஸ்ரீ விருது பெற்றார்.

குமார் பாலிவுட்டில் 1991ல் சௌகான்ந் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், அதைத்தொடர்ந்து, 1992ல் சிலிர்ப்பூட்டும் திரைப்படமான கிலாடி யில் நடித்தார். 1994ல் அதிரடி திரைப்படங்களான மெயின் கிலாடி து அனாரி மற்றும் மோஹ்ரா போன்ற திரைப்படங்களில் நடித்தார். அத்திரைப்படங்கள் அவ்ஆண்டிலேயே அதிக மொத்த பணம் வசூல் ஈட்டிய படங்களாக அமைந்தது. அதேவருடம் பிற்பாதியில், யாஷ் சோப்ரா அவருடைய காதற்காவியப் படமான யேஹ் தில்லகி யில் அவரை நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்தார், அதுவும் ஒரு வெற்றி படமாக அமைந்தது. இப்படத்தில் அவரது நடிப்பு திறமைக்க பாராட்டுதலைப் பெற்றார். இப்படத்தில் அவர் ஒரு காதல் நாயகனாக நடித்திருந்தார், இது அவர் முன்பு நடித்திருந்த அதிரடி பாணியை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இது வேறுபட்டிருந்தது. அதன்விளைவாக அவர் மிகச்சிறந்த நடிகர் என்ற பிலிம்ஃபேர் விருதிற்காகவும், ஸ்டார் ஸ்கிரின் விழாவுக்காகவும் முன்மொழியப்பட்டார். அதே ஆண்டு மேலும் குமாருக்கு , சுஹாக் மற்றும் குறைந்த செலவு படமான ஏலன் ஆகியவை வெற்றிப்படங்களாக அமைந்தன. இந்த எல்லா வெற்றிகளும், குமாரை அந்த வருடத்தின் ஒரு வெற்றிகரமான நடிகராக்கியது.
இவர் பாலிவுட் நடிகையான ட்விங்கிள் கன்னாவை 14 ஜனவரி 2001ல், திருமணம் செய்து கொண்டார். அவர்களது மகன் ஆரவ் 2002ல் பிறந்தான். 2009 ஏப்ரல் வகோலா காவல்துறையினர் அக்க்ஷய்குமார் மற்றும் டுவிங்கிள் கண்ணா இருவர் மீதும், லக்மே பேஷன் வாரம் நடைபெற்றபோது அக்க்ஷயின் உரப்புக் காற்சட்டை பட்டன்களை டுவிங்கிள் அவிழ்த்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு இந்தியக் குற்றவியல் சட்டம் 294 பிரிவின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது
இவர் நடித்த தமிழ் படம்
2.ஓ
