
தத், பாலிவுட் நட்சத்திரங்களான சுனில் மற்றும் நகரிஸ் தத் ஆகியோரின் மகனாவார். 1980ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் அவர் அறிமுகமானதில் இருந்து, தன்னை ஒரு முக்கிய நட்சத்திரமாக நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறார். சஞ்சய், லாரன்ஸ் ஸ்கூல் சனவார் என்ற இந்தியாவின் முன்னணி போர்டிங் பள்ளியில் படித்தார்.
சஞ்சய், ரிச்சா ஷர்மா என்பவரை 12 அக்டோபர் 1987 அன்று திருமணம் செய்தார். 1996ம் ஆண்டு ஷர்மா புற்று நோயால் இறந்தார். அவர்களின் மகள் திரிஷ்லா அமெரிக்காவில் வாழ்கிறார். அவரது இரண்டாவது மனைவி ரேகா பிள்ளை ஆவார். தத் தற்போது மூன்றாவதாக தில்னவாஷ் ஷேக் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார், அவர் மான்யதா என்றும் அறியப்படுகின்றார்.
16 டிசம்பர் 2008 ம் ஆண்டு, சஞ்சய் தத் [[ஊட்டச்சத்துக்குறைக்கு எதிரான மைக்ரோ ஆல்கே சுருள்பாசி பயன்படுத்தலுக்கான அரசாங்க நிறுவனத்திற்கான]] (IIMSAM) நல்லெண்ண தூதுவராக நியமிக்கப்பட்டார். ஊட்டச்சத்துக்குறை மற்றும் பட்டினி ஆகியவற்றுக்கு எதிராக அமைப்ப்பின் போராட்டத்திற்கு உதவும் சுருள்பாசி பயன்படுத்துதலை அவர் ஊக்குவிக்கின்றார். அவரது பங்கானது சுருள்பாசி பயன்படுத்தலை முக்கியமாகக் கொண்ட அமெரிக்க மில்லேனியம் மேம்பாட்டு இலக்குகளையும் ஆதரிக்கும்.
அண்மையில் சஞ்சய் தத்தின் வாழ்க்கையை சித்தரிக்கும் சஞ்சு என்ற இந்திப்படம் வெளியாகி வசூலை வாரிக்குவிக்கிறது.
