Sunday, June 21
Shadow

சூப்பர் ஸ்டார் படத்தில் நடிக்க மறுத்த சாய் பல்லவி மனம் உடைந்த இயக்குனர்

இந்திய சினிமாவில் ஒவ்வொரு மாநிலத்துக்கு ஒரு சூப்பர்ஸ்டார் உண்டு அதில் கோலிவுட் அதாவது ஆந்திரா சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு இவருக்கு இங்கு மிக பெரிய மார்கெட் உள்ள ஒரு நடிகர் இவருக்கு வந்த கதி என்ன தெரியுமா

மகேஷ் பாபு படத்தில் நடிக்க சாய் பல்லவி கூறிய காரணம் தான் பலரையும் வியக்க வைத்துள்ளது. சாய் பல்லவி கோலிவுட்டில் மட்டும் அல்ல டோலிவுட்டிலும் பிரபலமான நடிகை ஆவார். மகரிஷி படத்தை அடுத்து மகேஷ் பாபு நடிக்கவிருந்த மகேஷ் 26 படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க சாய் பல்லவியிடம் கேட்டார்களாம். சாய் பல்லவியோ நடிக்க மறுத்துவிட்டாராம்.

மகேஷ் 26 படத்தில் நடிக்க மறுத்து சாய் பல்லவி தெரிவித்த காரணம் தான் புதிதாக உள்ளது. அதாவது மகேஷ் பாபுவின் ரசிகர்கள் தன்னை சமூக வலைதளங்களில் கலாய்த்ததால் நடிக்க மறுத்துவிட்டாராம் சாய் பல்லவி.

சாய் பல்லவி நடிக்க மறுத்த பிறகு கீத கோவிந்தம் படம் புகழ் ரஷ்மிகா மந்தனாவிடம் கேட்டார்களாம். நான் ரொம்ப பிஸி, டேட்ஸ் இல்லை என்று கூறிவிட்டாராம் ரஷ்மிகா. இந்நிலையில் மகேஷ் 26 படத்திற்கே பிரச்சனை வந்துள்ளது.

அண்மையில் வெளியாகி ஹிட்டான எஃப் 2 படத்தை இயக்கிய அனில் ரவிபுடி தான் மகேஷ் 26 படத்தை இயக்குவதாக இருந்தது. இந்நிலையில் அவர் மகேஷ் பாபு படத்தை கிடப்பில் போட்டுவிட்டு ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படத்தை முதலில் எடுக்க விரும்புகிறாராம்.

சாய் பல்லவி, ரஷ்மிகா மட்டும் இல்லை உபேந்திராவும் மகேஷ் 26 படத்தில் நடிக்க மறுத்திருக்கிறார். தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்று கூறி அவர் நடிக்க மறுத்துள்ளார். முன்னதாக மகேஷ் 26 படத்தை சுகுமார் இயக்குவதாக இருந்தது.