Friday, January 17
Shadow

லீக்கான ரஜினியின் தர்பார் படப்பிடிப்பில் ஸ்டில்கள்

சூப்பர்ஸ்டார் ரஜினி பேட்ட படத்தை தொடர்ந்து தர்பார் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பிற்கு முன்னே போட்டோ ஷுட் எல்லாம் நடந்து ஃபஸ்ட் லுக்கும் வெளியாகிவிட்டது.

அதை பார்த்து கதை இப்படி தான் இருக்கும் என பலர் தங்களது கற்பனை திறனை வெளிக்காட்டியுள்ளார்கள். படத்தின் ஷுட்டிங் மும்பையில் வேகமாக நடந்து வருகிறது, இதில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு இணைந்ததாக கூறப்படுகிறது.

தற்போது சமூக வலைதளங்களில் தர்பார் படத்தில் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட படங்கள் வெளியாகியுள்ளது.

பேட்ட படத்தைத் தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் 167ஆவது படமான தர்பார் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். கடந்த 10ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில், பூஜையுடன் தொடங்கியது.

இப்படத்தில், ரஜினியுடன் இணைந்து நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு, பிரதீக் பாப்பர் என்ற பாலிவுட் நடிகர் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். அதுவும், ரஜினியின் மகளாக நிவேதா தாமஸூம், மனைவியாக நயன்தாராவும், வில்லனாக பாப்பர் நடிப்பதாகவும் தகவல் வெளியானது.