Wednesday, October 28
Shadow

நான் வெளியே போனால் இது தான் நடக்கும், எல்லோரையும் செஞ்சுடுவேன் – காயத்ரி ஓபன் டாக்

பிக் பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் பார்பவர்களின் மன அழுத்தை உண்டு பண்ணும் அளவுக்கு நிகழ்ச்சி மிக மோசமாக போகிறது என்று சொன்னால் மிகையாகது என்று தான் சொல்லணும் நேற்று நிகழ்ச்சி அதோடு இன்றைய ப்ரோமோ இரண்டும் நம் கலாசாரத்தை விட்டு எங்கு போகிறோம் என்று என்னும் அளவுக்கு உள்ளது இதற்க்கு முக்கிய காரணம் பிக் பாஸ் வீட்டின் சொர்ணாக்காவாக இருக்கும் காயத்திரி தான் என்று சொல்லணும்

சுஜா வந்தவுடன் அவரை பற்றி புறம் பேசிய காயத்திரி அதை மனதில் வைத்து கொண்டு வீட்டில் இருப்பவர்கள் அவரை தனிமை படுத்தியதோடு அவரை மிகவும் மோசமாக கிண்டல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் புதிதாக வந்துள்ள ஹரிஷ் கல்யாணிடம் காயத்ரியும் ஆரவ்வும் சேர்ந்து கொண்டு ஸ்நேகனை பற்றி புறம் பேசுகிறார்கள்.

அப்போது ஆரவ் இந்த சனிக்கிழமை எல்லாம் சரியாகிடும் என கூறுகிறார், அப்படி ஆகலனா வெளியே போய் ஒருத்தரையும் விட மாட்டேன், எல்லாரையும் செஞ்சிடுவேன் என பிரபல ரவுடி போலவே கூறுகிறார் காயத்ரி ரகுராம்.

இவரை போய் கணேஷும் சக்தியும் பேபி என கூறுகிறார்கள், ஆனால் இந்த பேபி செய்யற வேலையை பாருங்க.

Leave a Reply