Wednesday, June 24
Shadow

IMDb, 2025 ஆம் ஆண்டின் இதுவரை மிகவும் பிரபலமான இந்தியத் திரைப்படங்கள் மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியத் திரைப்படங்கள் பட்டியலை அறிவிவித்தது: ஜூலை-டிசம்பர் 2025

IMDb, 2025 ஆம் ஆண்டின் இதுவரை மிகவும் பிரபலமான இந்தியத் திரைப்படங்கள் மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியத் திரைப்படங்கள் பட்டியலை அறிவிவித்தது: ஜூலை-டிசம்பர் 2025

 

 

உலகளாவிய IMDb வாடிக்கையாளர்களின் பேஜ் வியூ அடிப்படையில், இதுவரை 2025 ஆம் ஆண்டின் மிகவும் பிரபலமான இந்தியத் திரைப்படமாக சாவா, இருக்கும் நிலையில் , மிகவும் அதிகளவில் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களின் பட்டியலில் கூலி முதலிடத்தை பிடித்தது

 

மும்பை, இந்தியா—ஜூலை 9, 2025—திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பிரபலங்கள் பற்றிய தகவல்களை வழங்குவதில் உலகின் மிகவும் பிரபலமான மற்றும் அதிகாரப்பூர்வ மூலாதாரமாக விளங்கும் IMDb (www.imdb.com), இன்றுவரையிலான 2025 ஆம் ஆண்டின் மிகவும் பிரபலமான இந்தியத் திரைப்படங்கள் மற்றும் ஜூலை மற்றும் டிசம்பர் 2025 மாதங்களுக்கு இடையில் வெளியிடப்படவிருக்கும் திரைப்படங்களில் மிகவும் அதிகளவில் எதிர்பார்க்கப்படும் இந்தியத் திரைப்படங்களின் பட்டியலை இன்று அறிவித்தது. இந்தப் பட்டியல்கள் எந்தெந்த திரைப்படங்களைக் காணலாம் என்பதை முடிவு செய்ய மாதம்தோறும் IMDb- தளப் பக்கத்துக்கு உலகளவில் நேரடியாக வருகை தரும் 250 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டிருக்கிறது.

 

“இன்றுவரையிலான2025 ஆம் ஆண்டின் மிகப் பிரபலமான இந்தியத் திரைப்படங்களில் சாவா முதலிடத்தைப் பெற்றதில் நாங்கள் மிகவும் பெருமிதம் கொள்கிறோம்” என்று சாவா . திரைப்படத்தின் இயக்குனர் லக்ஷ்மண் உதேகா , கூறினார். அவர் மேலும் கூறியதாவது ” இந்த அங்கீகாரத்தை மிகவும் சிறப்பு மிக்கதாகச் செய்வது எது என்றால் அது நேரடியாக ரசிகர்களிடமிருந்து வருவதுதான். விக்கி கெளஷல் , ராஷ்மிகா மந்தன்னா, மற்றும் அக்ஷய் கன்னா போன்ற முன்னணி நடிகர்களின் மிகச் சிறந்த நடிப்பில் உருவான இந்த மாட்டாக் ஃபிலிம் திரைப்படத்திற்கு ஒட்டுமொத்த ரசிகர்களும் வழங்கிய ஏகோபித்த அன்பு மற்றும் நேர்மறையான வரவேற்பு நம்பமுடியாத அளவிற்கு மனதுக்கு நிறைவைத் தந்தது. உலகம் முழுவதிலுமுள்ள பார்வையாளர்களோடு ஒத்திசைந்து இயங்கும் வகையிலான கதைகளை தொடர்ந்து உருவாக்க எங்கள் நடிகர்கள் பட்டாளம் மற்றும் முழுக் குழுவினார்களுக்கும் மன எழுச்சியை அளிக்கிறது.”

 

“IMDb வழங்கிய இந்த அங்கீகாரம் உலகம் முழுவதிலுமுள்ள எங்கள் ரசிகர்கள் நம்பமுடியாத ஆவில் வெளிப்படுத்திய உற்ச்சாகத்தை பிரதிபலிக்கிறது என்று கூலி திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் , கூறினார். காவியக் கதாநாயகர்களான ரஜனிகாந்த் மற்றும் சத்யராஜ் 38 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைவது திரையில் மாயாஜாலத்தை உருவாக்கியிருக்கிறது மற்றும் எங்கள் உருவாக்கம் பார்வையாளர்களோடு ஒத்திசைந்து இயங்கி அவர்களது எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும் என்று நானா நம்புகிறோம்”

 

2025 ஆம் ஆண்டின் இதுவரை மிகவும் பிரபலமான இந்தியத் திரைப்படங்கள்

சாவா

டிராகன்

தேவா

ரெய்டு 2

ரெட்ரோ

தி டிப்ளோமேட்

L2:எம்பூரான்

சிதாரே ஜாமீன் பார்

கேசரி சாப்டர் 2::தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் ஜாலியன்வாலா பாக்

விடாமுயற்சி

2025 ஜனவரி 1 ஆம் தேதி முதல் 2025 ஜூலை 1 ஆம் தேதிவரை இந்தியாவில் வெளியிடப்பட்ட அனைத்து திரைப்படங்களின் மத்தியில் IMDb பயன்பாட்டாளர்களிடமிருந்து குறைந்த பட்சம் 10,000 வாக்குகளைப் பெற்று தர வரிசையில் 6 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பீட்டை பெற்று IMDb வாடிக்கையாளர்களிடையே தொடர்ந்து மிகப் பிரபலமாக விளங்கும் இந்தத் திரைப்படங்கள் IMDb தளப்பக்கத்துக்கு உலகளவில் மாதந்தோறும் நேரடியாக வருகை தந்த 250 மில்லியன் பார்வையாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. .

 

மிகவும் அதிகளவில் எதிர்பார்க்கப்படும் திரைபடங்கள்: ஜூலை –டிசம்பர் 2025

கூலி

வார் 2

தி ராஜா சாகேப்

ஆங்கோன் கி கஸ்டாகியான்

சாயாரா

பாகி 4

சன் ஆஃப் சர்தார் 2

ஹிரிதயபூர்வம்

மஹாவதார் நரசிம்ஹா

ஆல்ஃபா

ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்பட திட்டமிடப்பட்டிருக்கும் இந்திய திரைப்படங்களின் மத்தியில் இங்கு பட்டியலிடப்பட்டிருக்கும் திரைபடங்கள் IMDb தளத்திற்கு வருகை தந்த பல நூறு மில்லியன் IMDbவாடிக்கையாளர்களிடையே 2025 ஜனவரி 1 முதல் 2025 ஜூலை வரையிலான காலத்தில் தொடர்ந்து மிகவும் பிரபலமானவைகளாக விளங்குகின்றன

 

இரண்டு பட்டியல்களிலும் இடம்பெற்ற திரைப்படங்களில் மோகன்லால், அஜய் தேவ்கன் , மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோர் இடம் பெற்றிருப்பது இங்கு குறிபிடத்தக்க ஒன்றாகும். மோகன்லால் L2 :எம்புரான்(L2: Empuraan )திரைப்படத்தில் முன்னணி வேடத்தில் நடிக்கிறார் அதேசமயம் ஹிருதயபூர்வம் (Hridayapoorvam) திரைப்படத்திலும் காட்சியளிக்கிறார். தேவா மற்றும் ரெட்ரோ (Deva and Retro) திரைப்படங்களில் ஹெக்டே தோன்றி நடிக்கிறார் மற்றும் கூலி திரைப்படத்திலும் காட்சி தருகிறார். அதே சமயம் தேவ்கன் ரெய்டு 2 (Raid 2 )திரைப்படத்தில் முன்னணி பாத்திரத்தில் தோன்றுகிறார் மற்றும் சன் ஆப் சர்தார் 2 (Son of Sardaar 2.) திரைப்படத்திலும் தோன்றி நடிக்கிறார். மேலும் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட புது ஆஹான் பாண்டே மற்றும் ஷானயா கபூர் ஆகியோர் முறையே அறிமுகமாகும் சையாரா (Saiyaara) மற்றும் ஆங்கோன் கி கஸ்டாகியான் (Aankhon Ki Gustaakhiyan) .திரைப்படங்களும் ஜூலை மாதத்தில் வெளியிடப்படவுள்ளது

 

2025 ஆம் ஆண்டின் இதுவரை மிகவும் பிரபலமான இந்தியத் திரைப்படங்கள் மத்தியில் ஆறு இந்தியிலும், மூன்று தமிழிலும் மற்றும் ஒன்று மலையாள மொழியிலும் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களாகும். அதே சமயம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களின் பட்டியலில் ஆறு இந்தித் திரைப்படங்களும் தமிழ் தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படத் துறைகள் ஒவ்வொன்றிலிருந்தும் ஒரு திரைப்படமும் இடம்பெறும் அதே சமயம் மஹாவதார் நரசிம்ஹா ( Mahavatar Narsimha ) ஆறு மொழிகளில் வெளியிடப்படுகிறது.

 

2025 ஆம் ஆண்டின் இதுவரை மிகவும் பிரபலமான இந்தியத் திரைப்படங்கள் குறித்து மேலும் அறிந்து கொள்ள இந்த வீடியோவை காணுங்கள் and அதன் முழுப் பட்டியலையும் (இங்கே. காணுங்கள்

 

 

IMDb வாடிக்கையாளர்கள் தங்களுக்கான தனிப்பட்ட வாட்ச் லிஸ்டில் https://www.imdb.com/watchlist. வலைத்தளத்தில் இவற்றை உள்ளிடுவதோடு கூடுதலாக மில்லியன் கணக்கான இதர புகழ் பெற்ற திரைபடங்கள் மற்றும் வெப் சீரீஸ்களையும் உள்ளிடலாம். வாடிக்கையாளர்கள் தாங்கள் எதை காண விரும்புகிறோம் என்பதை பின்தொடர்ந்து கண்காணிக்க IMDb வாட்ச் லிஸ்ட் அம்சம் தங்களுக்கு விருப்பமான திரைபடங்கள் மற்றும் வெப் சீரீஸ்களின் தன்மையமாக்கப்பட்ட பட்டியலை எளிதாக உருவாக்க அவர்களுக்கு உதவுகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் IMDb தரவரிசை புகழ் மற்றும் இன்னும் பலவற்றின் அடிப்படையில் அவர்களின் வாட்ச் லிஸ்ட் வக்த்தமைத்து தொகுத்துக் கொள்ளலாம்.

 

IMDb பற்றி

IMDb ஆனது திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பிரபலங்கள் பற்றிய தகவல்களை வழங்குவதில் உலகின் மிகவும் பிரபலமான மற்றும் அதிகாரப்பூர்வ மூலாதாரமாக விளங்கும் ஒன்றாகும் எந்தெந்த திரைப்படங்களைக் காணலாம் என்பதை கண்டறியவும் அதை முடிவு செய்யவும் IMDbPro மூலம் தங்கள் பொழுதுப்போக்கு தொழில்துறை வாழ்கையில் மேம்பாட்டடையவும் மற்றும் IMDb தரவுகள் மற்றும் நவீன போக்குகளுக்கான நுண்ணறிவை பயன்படுத்தி வணிகத்தில் வளர்ச்சி காணவும் உலகம் முழுவதிலுமுள்ள பல நூறு மில்லியன் வாடிக்கையாளர்கள் IMDb- தளத்தின் மீது சார்ந்திருக்கிறார்கள். எதையெல்லாம் காணலாம் மற்றும் அதை எங்கு காணலாம் என்பதை கண்டறியவும் முடிவு செய்யவும் ரசிகர்களுக்கு உதவுவதற்கான தயாரிப்புக்கள் மற்றும் சேவைகளில் பின்வருபவை அடங்கும். டெஸ்க்டாப் மற்றும் மொபைல் டிவைசஸ் சேவைகளுக்கான IMDb வலைத்தளம்; iOS மற்றும் ஆண்ட்ராய்ட் ஆப்ஸ்; மற்றும் பிரைம் வீடியோவில் எக்ஸ் ரே, பொழுது போக்குத் துறை தொழில் நிபுணர்களுக்கு IMDbPro மற்றும் Box Office Mojo ஆகியவற்றை IMDb வழங்குகிறது. IMDb அதன் மிகவும் பெரிய அளவிலான பரந்த மற்றும் அதிகாரபூர்வமான தரவுத் தளத்திலிருந்து உரிமங்களின் தகவல்களை உலகளவில் மூன்றாம் தரப்பு வணிகங்களுக்கு வழங்கிவருகிறது. developer.imdb.com. என்ற இணைய தளத்தில் மேலும் அறிந்து கொள்ளுங்கள்; IMDb ஒரு அமேசான் நிறுவனமாகும். மேலும் அதிக தகவல்களுக்கு https://www.imdb.com/press வலைத்தளத்துக்கு வருகை தரவும் மற்றும் @IMDb_in.ஐ பின்தொடருங்கள்