
ஒன்லி ஹீரோ என்று சொன்ன காமெடியன்கள் என்றால் அது வடிவேலு விவேக் என்ற இரு காமெடி நடிகர்கள் காமெடி உச்சத்தில் இருந்த போது ஒன்லி ஹீரோ என்று அடம் பிடித்து ஹீரோ என்ற போர்வையில் உள்ளே போய் வெந்து போய் இன்னி நோ ஹீரோ ஒன்லி கதை யும் கோமேத்யும் என்று வந்துள்ளனர்.
பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடித்த படம் சந்திரமுகி. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதையடுத்து சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை சிவலிங்கா என்ற பெயரில் கன்னடத்தில் இயக்கினார் பி.வாசு. அதே படத்தை தற்போது தமிழில் ரீமேக் செய்கிறார்.
ராகவா லாரன்ஸ் ரஜினி நடித்த வேடத்தில் நடித்து வருகிறார். அவருடன் சந்திரமுகியில் நடித்த நாசர், வடிவேலு உள்பட பலரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
மேலும், சந்திரமுகி படத்தில் காமெடியனாக நடித்த வடிவேலு, நாசரின் தம்பியாக நடித்திருந்தார். ஆனால் இந்த சிவலிங்கா படத்தில் வடிவேலுக்கு காமெடி காட்சிகள் அதிகமாக இருந்தபோதும், கதையோடு கலந்த முக்கியமான வேடத்தில் நடிக்கிறாராம்.
அதனால் சீன் பை சீன் காமெடி செய்யாமல் பல காட்சிகளில் குணசித்ர நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறாராம்.
அதனால், சிவலிங்காவில் வடிவேலுவை காமெடி-குணசித்ரம் கலந்த புதுமையான வேடத்தில் பார்க்கலாம் என்கிறார்கள்.