ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயம்ரவி முதல்முறையாக நடித்திருக்கும் படம் வனமகன். இந்த படத்தின் இசைவெளியீடு விழா இன்று காலை சத்யம் திரையரங்கத்தில் மிக விமர்சியாக வெளியிட்டார்கள் இந்த நிகழ்வில் இயக்குனர் பாலா சரண்யா பொன்வண்ணன், பொன்வண்ணன் ஸ்டன்ட் மாஸ்டர் சில்வா, ஜெயம்ரவி, பிரகாஷ்ராஜ் மோகன் ராஜா எடிட்டர் மோகன் நாயகி சாயிஷா, உதயா, ஹாரிஸ்ஜெயராஜ், மதன் கார்க்கி,ஐசரி கணேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இசைதட்டை பாலா ஐசரி கணேஷ் மற்றும் எடிட்டர் மோகன் வெளியிட மறைந்த நா. முத்துக்குமார் மகன் பெற்றுகொண்டார்.
இந்த படம் ஹாரிஸ்ஜெயராஜ்க்கு ஐம்பதாவது படம் இதுவரை இல்லாத ஒரு மிக சிறந்த பாடல்களை கொடுத்துள்ளார் என்று தான் சொல்லணும் இந்த நிகழ்வில் இரண்டு பாடல்கள் மற்றும் மூன்று மேகிங் பாடல் காட்சிகள் திரையிட்டனர் எல்லா பாடல்களும் பஞ்சபூதங்கள் போல அமைத்துள்ளது. ஒவ்வொன்றும் ஒரு விதம் நிச்சயம் இந்த ஆண்டின் சிறந்த பாடல்களாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்று தான் சொல்லணும்
இந்த படத்தில் ஜெயம்ராவி காட்டுவாசியாக நடித்துள்ளார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இப்படத்தில் இவருக்கு ஒரு வசனம் கூட கிடையாதாம். கமல், விக்ரமுக்கு பிறகு தமிழில் இதுபோன்று ரிஸ்க் எடுக்கும் முன்னணி நடிகர் இவர்தான்.
இந்த படத்தின் நாயகியாக பிரபல ஹிந்தி நடிகர் தீலிப் குமார் பேத்தி சாயிஷா நாயகியாக அறிமுகமாகிறார். அடேங்கப்பா அப்படி ஒரு அழகு மட்டும் இல்லை இது முதல் அடமா என்று சொல்லும் அளவுக்கு திறமையும் உள்ள ஒரு நடிகை குறிப்பாக படத்தில் இவரின் அறிமுக பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். பார்ப்பவர்கை வியக்கவைகிறார் அப்படி ஒரு நடனம் இந்த பாடலுக்கு நடம் அமைத்தது பிரபுதேவா மாஸ்டர் அவருக்கு இணையாக நடனம் ஆடியுள்ளார் என்று தான் சொல்லணும். நிச்சயம் தமிழுக்கு மிக பெரிய சிறந்த நடிகை கிடைத்த பெருமை இயக்குனர் விஜய்க்கு சேரும் என்பதில் சந்தேகம் இல்லை
இயக்குனர் விஜய் மிக பெரிய ரிஸ்க் எடுத்து இருக்கும் படம் என்று தான் சொல்லணும் கரணம் தப்பினால் மரணம் என்று சொல்லும் அளவுக்குகாண கதை மற்றும் திரைகதை அது மட்டும் இல்லை பொருள் செலவும் மிகுந்த பொருள் செலவில் எடுக்கப்பட்டுள்ள படம்மும், ஆனால் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இந்த படத்தின் ட்ரைலர் இந்த படத்தின் வெற்றியை தீர்மானித்து விட்டது என்று தான் சொல்லணும். அந்த அளவுக்கு ஒரு மேகிங் இந்த படம் அடுத்த மாதம் 12ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.