
இன்றைய தமிழ் சினிமாவில் எல்லோர் பார்வையும் உள்ள ஒரு நடிகர் என்றால் அது சிவகார்த்திகேயன் என்று சொல்லலாம் காரணம் அவரின் வளர்ச்சி கண்டு ஒரு பக்கம் பெருமையடைவார்கள் சிலர் உண்டு பலர் அவரின் வளர்ச்சியை கண்டு பொறாமை படுவர்களும் அதிகம் காரணம் இந்த குறுகிய காலத்தில் அவரின் வளர்ச்சி அந்த அளவுக்கு இருப்பதே முக்கிய காரணம் அவரின் முக்கிய வளர்ச்சியின் காரணம் என்ன என்றால் தனக்கு என்ன வரும் அதை ரசிகர்கள் எப்படி வரவேர்ப்பர்கள் என்று புரிந்து தன் கதையை தேர்ந்தெடுத்து நடிக்கிறார் இது தான் இவரின் வெற்றிக்கு காரணம்.
கடைசியாக வெளியான ரெமோ படம் வரும் போது சிவகார்த்திகேயன் மீது கண் வைக்காத நபர்களே இல்லை என்று தான் சொல்லணும் அதிலும் குறிப்பாக சினிமாகாரர்கள் இவருக்கு எதுக்கு இவ்வளவு பெரிய அகல கால் என்று அப்போதும் சிவகார்த்திகேயன் மற்றும் தயாரிப்பாளர் ராஜா இருவரும் அவர்கள் கதை மேலும் இயக்குனர் மேலும் வைத்த நம்பிக்கை பொய்க்கவில்லை மிக பெரிய வசூலை வாரி இறைத்தது என்று தான் சொல்லணும். இது தமிழ் சினிமா மட்டும் இல்லை இந்திய சினிமாவே சிவகார்த்திகேயன் பக்கம் திரும்பி பார்க்கவைத்தது என்று தான் சொல்லணும்.
அதேபோல தற்போது நடித்து கொண்டு இருக்கும் படம் வேலைக்காரன் இந்த படம் ஆரம்பிக்கும் போதும் இதே தான் முனுமுனுப்பு இருந்தது இதையும் காதுல வாங்காமல் தான் இந்த படம் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இந்த படம் ரிலீஸ் தேதிவரை வந்துள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் மலையாள முன்னணி நடிகர் பாகத் பாசல், ரோபோஷங்கர், சினேஹா, மற்றும் பலர் நடிப்பில் அனிருத் இசையில் மோகன்ராஜா இயக்கத்தில் மிகுந்த பொருள் செலவில் உருவாகி இருக்கும் இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 29ம்தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதே போல இந்த படத்தின் முதல் பார்வை வரும் ஜூன் மாதம் 5ம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது ,
