Friday, November 6
Shadow

திரையுலக நட்சத்திரங்கள் சங்கமித்த கண்ணன் ரவி இல்லத் திருமண விழா – சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற தீபக் ரவி – செந்தாமரை திருமணம்!

திரையுலக நட்சத்திரங்கள் சங்கமித்த கண்ணன் ரவி இல்லத் திருமண விழா – சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற தீபக் ரவி – செந்தாமரை திருமணம்!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி எனப் பல மொழித் திரையுலகப் பிரபலங்கள் பங்கேற்பு – அரசியல், தொழில் துறையினரின் வருகையால் களைகட்டிய விழா!

சென்னையில் நடைபெற்ற ஒரு குடும்பத் திருமண விழா, இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் ஒன்றுகூடிய பிரம்மாண்ட நிகழ்வாக மாறியிருக்கிறது. KRG Group of Companies நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கண்ணன் ரவி – KRD Hospitality நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தீபா ரவி தம்பதியினரின் மகனும், KRG Productions நிறுவனத்தின் இணைத் தயாரிப்பாளருமான தீபக் ரவி, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் D.M. கதிர் ஆனந்த் – கிங்ஸ்டன் கல்வி நிறுவனங்களின் தலைவர் சங்கீதா கதிர் ஆனந்த் தம்பதியினரின் மகள் கே. செந்தாமரையை மணந்தார்.

இவர்களது திருமண வரவேற்பு அக்டோபர் 31-ம் தேதியும், திருமணம் நவம்பர் 1-ம் தேதியும் சென்னையில் உள்ள நீலாங்கரை R.K. கன்வென்ஷன் ஹாலில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்த விழாவின் முக்கிய அம்சமாக, இந்தியாவின் பல்வேறு மொழித் திரையுலகங்களைச் சேர்ந்த பிரபலங்கள் ஒரே இடத்தில் சங்கமித்தனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட திரையுலகங்களின் முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் எனப் பலரும் நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இவர்களுடன் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களும் பங்கேற்றனர்.

திரையுலக நட்சத்திரங்களின் வருகை, பிரம்மாண்டமான அரங்க அமைப்பு, சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகள் என விழா முழுவதும் கோலாகலமாக நடைபெற்றது. பல்வேறு மொழித் திரையுலகங்களைச் சேர்ந்த கலைஞர்கள் ஒரே நிகழ்வில் பங்கேற்றது, இந்தத் திருமணத்தை ஒரு குடும்பக் கொண்டாட்டம் என்பதைக் கடந்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த முக்கிய நிகழ்வாக மாற்றியது.

தொழில்துறையிலிருந்து திரையுலகம் வரை தடம் பதிக்கும் KRG!

துபாயைத் தலைமையிடமாகக் கொண்டு சர்வதேச அளவில் செயல்பட்டு வரும் Kannan Ravi Group (KRG), கட்டுமானம், எலக்ட்ரோ மெக்கானிக்கல் சேவைகள், ரியல் எஸ்டேட், ஹாஸ்பிட்டாலிட்டி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனது வணிகச் செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறது. கண்ணன் ரவி தலைமையில் வளர்ந்து வரும் இக்குழுமம், தற்போது திரைப்படத் தயாரிப்புத் துறையிலும் தனது செயல்பாடுகளைத் தொடர்ந்து வருகிறது.

KRG Productions நிறுவனத்தின் சார்பில் ‘இராவண கோட்டம்’, ‘தலைவர் தம்பி தலைமையில்’, ‘TN 2026’ உள்ளிட்ட திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும், புதிய திரைப்படங்களின் தயாரிப்புப் பணிகளிலும் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்தத் தயாரிப்பு முயற்சிகளில் இணைத் தயாரிப்பாளராக தீபக் ரவியும் முக்கியப் பங்காற்றி வருகிறார்.

தொழில் துறையில் சர்வதேச அளவில் செயல்பட்டு வரும் KRG குழுமம், திரைப்படத் தயாரிப்பிலும் தனது பயணத்தை விரிவுபடுத்தி வரும் நிலையில், அதன் குடும்ப விழாவான இந்தத் திருமணம் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களின் வருகையால் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.

உறவினர்கள், நண்பர்கள், திரையுலகப் பிரபலங்கள், அரசியல் மற்றும் தொழில்துறை முக்கியப் பிரமுகர்கள் எனப் பலரும் ஒன்றுகூடி மணமக்களை வாழ்த்திய இந்த விழா, சென்னையில் நடைபெற்ற நட்சத்திரங்கள் நிறைந்த திருமணக் கொண்டாட்டங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாக அமைந்தது.

Indian Film Industry Celebrities Come Together for KRG Group’s Kannan Ravi Family Wedding! Deepak Ravi and Senthamarai Tie the Knot in a Grand Celebration in Chennai

Leading stars from Tamil, Telugu, Malayalam, Kannada and Hindi cinema grace the wedding celebrations, alongside prominent personalities from politics and business!

Chennai witnessed a spectacular wedding celebration as prominent personalities from across the Indian film industry came together for the wedding of Deepak Ravi and K. Senthamarai. The grand occasion, hosted by Kannan Ravi, Managing Director of KRG Group of Companies, brought together leading actors, actresses, directors, producers and distinguished guests from various fields.

Deepak Ravi, son of Kannan Ravi and Deepa Ravi, CEO of KRD Hospitality, is also associated with KRG Productions as a co-producer. He married K. Senthamarai, daughter of Dr. D.M. Kathir Anand, Member of Parliament from Vellore, and Sangeetha Kathir Anand, Chairperson of Kingston Educational Institutions.

The wedding reception took place on October 31, followed by the wedding ceremony on November 1. Both events were held in a grand manner at R.K. Convention Hall in Neelankarai, Chennai.

One of the major highlights of the celebrations was the presence of prominent personalities from several film industries across India. Leading stars from Tamil, Telugu, Malayalam, Kannada and Hindi cinema attended the occasion, making it a memorable gathering of the Indian entertainment fraternity. Several directors, producers and other industry personalities also joined the celebrations to extend their wishes to the newlyweds.

The celebrations also witnessed the participation of political leaders, industrialists and distinguished guests from various sectors. The impressive arrangements, grand ambience and presence of several well-known personalities made the occasion one of the notable wedding celebrations in Chennai.

KRG Group Expands Its Presence Across Industries and Indian Cinema

Headquartered in Dubai, Kannan Ravi Group (KRG) has established its presence across several international business sectors, including construction, electromechanical services, real estate and hospitality. Under the leadership of Kannan Ravi, the group continues to expand its business operations across multiple sectors while steadily strengthening its presence in the Indian film industry.

Through its production banner, KRG Productions, Kannan Ravi has backed films such as Iravaan Kottam, Thalaivar Thambi Thalaimaiyil and TN 2026. The production house continues to work on several upcoming film projects, with Deepak Ravi playing an important role in the company’s filmmaking initiatives as a co-producer.

With its growing presence in international business and the Indian entertainment industry, the wedding celebration of the KRG family brought together personalities from cinema, politics and business under one roof.

The grand wedding of Deepak Ravi and Senthamarai concluded on a celebratory note, with the presence of leading film personalities and distinguished guests making it a memorable occasion for the families and everyone associated with the celebrations.