Thursday, April 23
Shadow

ஹாலிவுட் படத்திற்கு நிகரான காட்சிகளோடு உருவாகியுள்ள ’இந்திரஜித்’

பிரம்மாண்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவின் இளையமகன் இயக்குநர் கலாபிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இந்திரஜித்’ ஹாலிவுட் படங்களுக்கு நிகரான காட்சிகளோடு உருவாகியுள்ளது.

கலைபுலி தாணு என்றாலே பிரமாண்டம் அது இந்திய சினிமாவுக்கு தெரிந்த விஷயம் இந்த பிரமாண்டத்தின் பிரமாண்டம் இயக்கம் படம் எப்படி இருக்கும் அது மிக பிரமாண்டம் ஆம் இந்திய சினிமாவுக்கு சவால் விடும் அளவுக்கு ஒரு படம் அவரின் மகன் கலா பிரபு இயக்கத்தில் இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா மிகவும் அமைதியாக ஆர்பாட்டம் இல்லாமல் நடந்தது.

பொதுவாக தானே விழா என்றால் அது ஓர் மிக பெரிய பிரமாண்டம் இருக்கும் ஆனால் நேற்று இக எளிமையாக தன மகன் படத்தின் இசை வெளியீட்டு எல்லாம் காரணமாக தான் தாணு செய்துள்ளார் ஏன் என்றால் படம் அந்த அளவுக்கு பிரமாண்டம் உன் படம் பேசப்படும் போது எதுக்கு பிரமாண்ட விழா என்று அமைதியாக நடத்திவிட்டார்

கெளதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அஸ்ரிதா ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் ராஜ்வீர் சிங், சுதன்சூ பாண்டே, அமித், பிரதாப் போத்தன், சச்சின் கேதாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

கே.பி என்ற அறிமுக இசையமைப்பாளர் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் ஏராளமான திரை நட்சத்திரங்கள் கலந்துக் கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் திரையிடப்பட்ட ஒரு பாடலும், படத்தின் டிரைலரும் பெரும் கவர்ந்ததோடு, தற்போது ரசிகர்களிடமும் பலத்த வரவேற்பு பெற்றுள்ளது.

அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளும், சாகச காட்சிகளும் நிறைந்த ‘இந்திரஜித்’ ஹாலிவுட் படங்களுக்கு நிகரான தொழில்நுட்ப யுக்தியுடன் எடுக்கப்பட்டிருப்பதை படத்தின் டிரைலரை பார்க்கும் போதே உணர முடிகிறது. அந்த அளவுக்கு காட்சிகள் அனைத்தும் பிரம்மாண்டமான முறையில் படமாக்கப்பட்டுள்ளது.

Leave a Reply