Friday, March 29
Shadow

இரவின் நிழல் திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

பார்த்திபன் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில், பார்த்திபன், வரலக்‌ஷ்மி சரத்குமார், ரோபோ சங்கர் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள இரவின் நிழல் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.

சினிமா ஃபனான்ஸியரான நந்து ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். அவரை போலீசார் கைது செய்ய துரத்தி வருகின்றனர். போலீசில் சிக்காமல் தன்னை காப்பாற்றிக் கொள்ள போலிச் சாமியார் ரோபோ சங்கரின் உதவியை நாட அங்கே நந்துவுக்கு என்ன மாதிரியான சிக்கல் ஏற்படுகிறது. ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்த ஒரு சிறுவன் சொந்தக் காலில் நிற்க எத்தனை பாவங்களை செய்ய வேண்டி இருக்கு, தான் செய்த குற்றங்களையும் தனது வாழ்க்கையும் இதே சிங்கிள் ஷாட் படத்தில் நிகழ்காலம், கடந்த காலம் என மாற்றி மாற்றி பிளாஷ்பேக்குக்குள் பிளாஷ்பேக் காட்சிகளை எல்லாம் எந்தவொரு கட்டும் இல்லாமல் வைத்து அதனை பார்வையாளருக்கு கடத்தி இருக்கும் விதம் நந்துவின் வாழ்க்கையில் வரும் பெண்கள், அவனுக்கு செய்யும் நல்லது, கெட்டது கடைசியில் நந்துவுக்கு என்ன நடக்கிறது என்பது தான் இரவின் நிழல் படத்தின் கதை.

படத்தின் பிளஸ்:
பார்த்திபன், வரலக்‌ஷ்மி சரத்குமார், ரோபோ சங்கர், பிரியங்கா ருத், பிரிகடா ஆகியோரின் நடிப்பு.
ஒளிப்பதிவு, இசை, லைட்டிங் என அனைத்துமே இரவின் நிழலுக்கு கிடைத்திருக்கும் பலம் தான்.

படத்தின் மைன்ஸ்:
டிராமாத்தனம், கெட்ட வார்த்தைகள், பாலியல் கொடுமை காட்சி

இரவின் நிழல் ரசிகர்களை கவரும்.