Thursday, March 27
Shadow

இவன் யாரென்று தெரிகிறதா’ – திரை விமர்சனம்( சிறப்பு ) Rank 2.5/5

”கலரா இருந்தா பிகரு உஷாராயிடாது, காதலிப்பதற்கு தனி திறமை வேணும், அதெல்லாம் உனக்கு தெரியாது, சொன்னாலும் புரியாது”, என்று ஹீரோவிடம் அவரது நண்பர்கள் சொல்ல, ஒரு அழகான பெண்ணை காதலிச்சு, அவள பைக்குல ஏத்திக்கிட்டு உங்க முன்னாடிய வந்து, பிறகு அவளையே மனைவியாக்கி காட்றன் பாருங்கடா, என்று அண்ணாமலை ரஜினிகாந்த் ஸ்டைலில் நண்பர்களிடம் சபதம் போட்டுட்டு காதலியை தேடி அலைகிறார் ஹீரோ விஷ்ணு.

சில தோல்விகளுக்குப் பிறகு ஹீரோவின் கண்ணில் ஹீரோயின் வர்ஷா பட அவருக்கு காதல் நூல் விட ஆரம்பித்த, பிறகு தான் தெரிகிறது அவர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் என்று. போலீஸாக இருந்தாலும் பரவாயில்லை என்று வர்ஷாவுக்கு தொடர்ந்து காதல் தூதுவிடும் விஷ்ணு காதலில் வெற்றி பெற்றாரா இல்லையா, என்பதை நகைச்சுவையாக சொல்லியிருப்பதுதான் ‘இவன் யாரென்று தெரிகிறதா’ படத்தின் கதை.

காதல் படமாக தொடங்கும் படம், அடுத்தடுத்த காட்சிகளில் காமெடிப் படம் என்ற அடையாளத்துடன் பயணித்தாலும், இரண்டாம் பாதியின் போது எண்ட்ரி கொடுக்கும் மும்பை பாய்ஸ்களான அருள்தாஸ், பக்ஸ், ராம்ஸ் கூட்டணியின் காமெடி சரவெடியாக வெடிக்கிறது.

ஹீரோ விஷ்ணு பார்ப்பதற்கு கோபாலு போல இருந்தாலும், தனது கதாபாத்திரத்திற்கான பர்பாமன்ஸை கச்சிதமாக கொடுத்திருக்கிறார். எந்த கவலையும் இல்லாம, எப்போதும் சந்தோஷமாக இருக்கும் வெகுளித்தனமான குணாதியசம் கொண்ட அவரது கதாபாத்திரத்தை ரசிகர்கள் ரசிக்கும்படியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள புதுமுக ஹீரோ விஷ்ணுவை மனதாரா பாராட்டலாம்.

தோற்றத்தில் போலீஸ் வேடத்திற்கு சூட்டாகமல் இருந்தாலும், தனது நடிப்பின் மூலம் போலீசாக பல இடங்களில் ஜொலிக்கிறார் வர்ஷா. ”உனக்கு எல்லாமே புரியுது அறிவு, ஆனா லேட்டாக புரியுது” என்று தனது அப்பாவியான குரலில் சொல்லும் ஹீரோவின் முன்னாள் காதலியான இஷாரா, அப்பா வேடத்தில் நடித்துள்ள ஜெயப்பிரகாஷ், ஹீரோவின் நண்பர்களாக நடித்துள்ள அர்ஜுன், ராஜ்குமார் என அனைத்து நடிகர்களின் பர்பாமன்ஸுலும் நகைச்சுவை நிரம்பி வழிகிறது.

இசை என்.ஆர்.ரகுநந்தன், பாடல்கள் யுகபாரதி என்று டைட்டில் கார்டில் பார்த்ததோடு சரி, மற்றபடி எந்த பாடல்களிலும் இவர்களது அக்மார்க் இல்லாதது பெரும் ஏமாற்றம். பி & ஜி-யின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்பட பயணிப்பதுடன், மும்பய் பாஸ்களுடன் இரண்டு ஹீரோயின்கள் ஆட்டம் போடும் பாடலை கலர்புல்லா படமாக்கியிருக்கிறார்.

பொழுதுபோக்கு படம் என்ற பெயரில் ரசிகர்களை புரட்டி எடுப்பது, காமெடி என்ற பெயரில் கதற விடுவது, என்றெல்லாம் இல்லாமல், ஆரம்பத்தை சைலண்டாகவும், முடிவை அமர்க்களமாகவும் கையாண்டிருக்கும் இயக்குநர் எஸ்.டி.சுரேஷ்குமார்.
முதல் பாதி முழுவதுமே ஹீரோ மற்றும் அவரது நண்பர்களின் காதல் காமெடிகளால் ரசிகர்களை சிரிக்க வைத்துவிட்டு, இரண்டாம் பாதியில் மும்பை பாய்ஸ் கூட்டணியை களம் இறக்கி நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறார்.

எதுவென்னாலும் ஆடர் பண்ணி சாப்பிடுன்னு சொன்னதக்கு இலங்கை கண்டியில் இருந்து மீன் ஆர்டர் பண்ணி சாப்பிட்டு இருக்கான் பாஸ். அதைவிடவும், குளிரா இருக்குதுன்னு நெருப்பு கோழியை ஆடர் பண்ணி சாப்பிட்டு இருக்கான் பாஸ், என்று ஹீரோவைப் பற்றி ஆள் கடத்தல் கும்பல் சொல்லி புலம்பம் காட்சிகளாகட்டும், ஆள் கடத்தல் என்ற பெயரில் ஜெயப்பிரகாஷிடம் மொக்கை வாங்கும் காட்சிகளாட்டும் அத்தனையும் நம் வயிற்றை புண்ணாக்கும் காட்சிகளாக இருக்கின்றன.

முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு மட்டுமே முக்கியத்தும் கொடுத்துள்ள ‘இவன் யாரென்று தெரிகிறதா’ எல்லோராலும் தெரிந்துக் கொள்ளவேண்டியவன் என்று சொல்வதைக் காட்டிலும் பார்த்து ரசிக்க கூடியவனாகவே இருக்கிறான்.

Leave a Reply