Tuesday, March 17
Shadow

AAA தோல்வி சிம்பு சினிமாவை விட்டு விலகுவேன் சிம்பு மிரட்டல்

தமிழ் சினிமா வரலற்றில் ஏன் சிம்பு திரை வாழ்க்கையில் இதுவரை வராத தோல்வி என்றால் அது கடந்த வாரம் வெளியான AAA படம் தான் என்று சொல்லணும் பொதுவாக சிம்பு படம் என்றால் கொஞ்சம் ஆபாசம் இருக்கும் அதேபோல கதையும் காட்சிகளும் இருக்கும் இவரின் அப்பா டி.ஆர்.இவருக்காக பல கோடிகளை இழந்தவர் காரணம் இவரின் திரையுலக வாழ்கை மிகவும் பிரகாசமாக இருக்கவேண்டும் என்று ஆனால் இவரின் சமீப ரிலீஸ் மிக மோசமான தோல்வியை தழுவியது அவரின் ரசிகர்கள் அவரை மிகவும் கேவலமாக பேசியது நாம் அனைவரும் பார்த்தோம் இதனால் சிம்பு ஒரு முடிவு எடுத்துள்ளார்.

நடிப்பதற்கான ஆசையே போய்விட்டது, ரசிகர்களுக்காகவே தற்போது நடித்து வருகிறேன், என்று கூறிய சிம்பு, தற்போது “சினிமாவை விட்டே விலகிடுவேன்”என்று கூறியுள்ளார்.

சிம்புவின் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியுள்ளது. சிம்புவின் ரசிகர்களே சிலர், காரி துப்பியுள்ளனர்.

இது ஒரு புறம் இருக்க, படப்பிடிப்பு தங்களுக்கு ரொம்ப சிரமம் கொத்துவிட்டார், என்று படத்தயாரிப்பாளர் சிம்பு மீது புகார் கூறியுள்ளார். இவர் மட்டுமல்ல சிம்புவை வைத்து படம் தயாரிக்கும் பலர் இந்த குற்றச்சாட்டை கூறுவது வழக்கம் தான்.

ஆனால், இதை மறுத்துள்ள சிம்பு, இயக்குநர்களுக்கு தேவையான நடிப்பை கொடுப்பதற்கான மனநிலை வந்த பிறகே நான் வீட்டில் இருந்து படப்பிடிப்புக்கு கிளம்புவேன். அதுவரை யார் என்ன சொன்னாலும், என்ன திட்டினாலும் படப்பிடிப்பு தளத்திற்கு செல்ல மாட்டேன்.

நான் நடிக்கும் காட்சிகளுக்கு 20 முதல் 25 டேக்குகள் வாங்குவதாகவும், அதனால் தான் படம் லேட்டாவதாகவும் சிலர் சொல்கிறார்கள். அது உண்மை என்று என்னுடன் பணியாற்றிய ஒரு இயக்குநராவது சொல்லட்டும், நான் சினிமாவை விட்டே விலகிவிடுகிறேன், என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply