Saturday, April 18
Shadow

ஜாக்கிசான் நடித்துள்ள #திபாரினர் தமிழில் நவம்பர் 3 இன்று முதல்

உலகம் முழுக்க ஆக்சன் படங்கள் பார்ப்பவர்களின் அன்புக்குரிய அபிமான கதாநாயகன் #ஜாக்கிசான். மொழி, இனம் கடந்து ஆறிலிருந்து அறுபது வரை சினிமா ரசிகர்களால் ஆராதிக்கப்படும் நாயகன் இவர்.

அப்படிப்பட்ட #ஜாக்கிசான் நடித்து எந்த நாட்டில் படம் வெளியாகிறதோ அந்தநாட்டு மக்களின் பிராந்திய மொழிகளில் மொழி மாற்றுப் படமாக உருவாக்கி படத்தைக் கொண்டு வர பல தயாரிப்பாளர்கள் போட்டி போடுவார்கள்.

அவ்வகையில் தமிழில் இதைக் கொண்டு வருகிறது #ஒயிட்பாக்ஸ் நிறுவனம் .

#திபாரினர் என்று பெயர் இருந்தாலும்

#ஜாக்கிசான் நடித்த மூலப்படமான #திபாரினர் ‘(The Foreigner)ஆங்கிலப்படம் அக்டோபர் 13 அன்று இந்தியா தவிர்த்து உலகம் முழுவதும் வெளியாகி வசூலில் பட்டையைக் கிளப்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படம் நவம்பர் 3-ல் தமிழகத்தில் 150 திரையரங்குகளில் வெளியாகிறது.

ஆக்க்ஷன், சென்டி மென்ட் கலந்து தயாராகியிருக்கும் #திபாரினர் படத்தில் #ஜாக்கிசானுடன் மோதும் வில்லனாக #பேஸ்பர்ஜான் நடித்திருக்கிறார்.

வசூலில் சாதனை படைத்த ஹாலிவுட் நடிகர் #ஜாக்கிசான் படங்களை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு #திபாரினர் நல்ல விருந்தாக இருக்கும்.’ என்கிறார் #ஒயிட்பாக்ஸ் ஸ்டுடியோ #ரங்கநாதன்.

ஜேம்ஸ் பாண்ட் படமான ‘கேசினோ ராயல்’ படத்தை இயக்கியுள்ள மார்ட்டின் கேம்பக் இயக்கத்தில் தயாராகி உள்ள #திபாரினர் தமிழக ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் ஹாலிவுட் படமாக இருக்கும் என்கிறார் #ரங்கநாதன்.

#ஒயிட்பாக்ஸ் ஸ்டுடியோ சார்பில் #ரங்கநாதன் தமிழுக்கு மொழிமாற்றம் செய்துள்ள இந்த #திபாரினர் திரைப்படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை மதுரைமீனாட்சி கிரியேஷன்ஸ் சார்பில் ஏ. ஞானோதயம் வாங்கியுள்ளார்.

இன்று முதல் படத்தை வெளியிடுகிறார்

Leave a Reply