Friday, March 13
Shadow

தமிழ்ப்படம் 2.0 படத்தில் புதிய அவதாரம் எடுக்கும் ஜீவா

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் `தமிழ்ப்படம்’. சிவா, திஷா பாண்டே உள்பட பலரும் நடித்திருந்த இந்த படத்தின் இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. சமீபத்தில் வெளியான இந்த பட போஸ்டர்களுக்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அத்துடன் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

சிவா – ஐஸ்வர்யா மேனன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த திஷா பாண்டேவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகர் ஜீவா இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாகவும் ஒரு தகவல் கசிந்திருக்கிறது. அநேகமாக படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் ஜீவா வந்து கலக்குவார் என்று நெட்சன்கள் பேசி வருகின்றனர்.

சென்னையை தொடர்ந்து இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது மலேசியாவில் நடத்தப்பட்டு வருகிறது. அதனை முடித்த பிறகு படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக ஆரம்பிக்கப்பட்டு படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாம். `விக்ரம் வேதா’ படத்தை தயாரித்த ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் சசிகாந்த் இந்த படத்தை தயாரிக்கிறார். அத்துடன் இந்த படத்தின் மூலம் அவர் நடிகராகவும் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.