மிர்ச்சி சிவாவின் தமிழ்ப்படம் 2.0’வின் பெயர் மாற்றம்
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் 2010-ம் ஆண்டு ரிலீஸான படம் ‘தமிழ்ப்படம்’. அதற்கு முன்பு வெளியான பல தமிழ்ப் படங்களைக் கிண்டல் செய்து இந்தப் படம் எடுக்கப்பட்டது. சிவா, திஷா பாண்டே நாயகன் - நாயகியாக நடித்த இந்தப் படத்தில், பரவை முனியம்மா, எம்.எஸ்.பாஸ்கர், வெண்ணிறாடை மூர்த்தி, மனோபாலா, டெல்லி கணேஷ், பொன்னம்பலம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.
இந்தப் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, 8 ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சஷிகாந்த் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். சிவா ஹீரோவாக நடிக்க, திஷா பாண்டே மற்றும் ஐஸ்வர்யா மேனன் இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். கஸ்தூரி ஒரு குத்துப்பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.
இந்தப் படத்துக்கு ‘தமிழ்ப்படம் 2.0’ என்று முதலில் தலைப்பு வைத்தனர். ஆனால், திடீரென ‘தமிழ்ப்படம் 2’ என்று தலைப்பை மாற்றியுள்...

