Wednesday, November 11
Shadow

ஜியோஹாட்ஸ்டார் MENA பிராந்தியத்தில் கால் பதிப்பு!

ஜியோஹாட்ஸ்டார் MENA பிராந்தியத்தில் கால் பதிப்பு!

STARZPLAY உடன் இணைந்து மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகளில் சேவை விரிவாக்கம்

சென்னை, அக்டோபர் 6, 2026: இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான ஜியோஹாட்ஸ்டார், தனது சர்வதேச விரிவாக்கத்தின் அடுத்த கட்டமாக மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா (MENA) பிராந்தியத்தில் தனது சேவையைத் தொடங்கியுள்ளது.

ஏற்கனவே இங்கிலாந்து, கனடா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தனது சேவையை விரிவுபடுத்தியுள்ள ஜியோஹாட்ஸ்டார், தற்போது MENA பிராந்தியத்திலும் தனது பன்மொழி பொழுதுபோக்கு உள்ளடக்கங்களை வழங்குகிறது. இதற்காக அப்பகுதியின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான STARZPLAY உடன் ஜியோஹாட்ஸ்டார் கூட்டணி அமைத்துள்ளது. STARZPLAY செயலி மற்றும் இணையதளத்தில் ஜியோஹாட்ஸ்டார் தனிப்பிரிவாக இடம்பெறும்.

இந்த கூட்டணியின் மூலம் MENA பிராந்திய ரசிகர்கள், இந்தியாவில் வெளியாகும் அதே நேரத்தில் புதிய ஜியோஹாட்ஸ்டார் ஒரிஜினல் தொடர்களை பல்வேறு மொழிகளில், 10 மொழிகள் வரையிலான ஆடியோ வசதியுடன் காண முடியும்.

மேலும், ஜியோஸ்டார் தொலைக்காட்சி சேனல்களின் பிரபல நிகழ்ச்சிகள், பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் இதில் இடம்பெறுகின்றன. குறிப்பாக ‘காஃபி வித் கரண்’ நிகழ்ச்சியின் வரவிருக்கும் சீசன் மற்றும் பல மொழிகளில் ஒளிபரப்பாகும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிகளும் ரசிகர்களை சென்றடைய உள்ளன. தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, வங்காளம் உள்ளிட்ட பல மொழிகளில் உள்ளடக்கங்கள் வழங்கப்படுகின்றன. MENA பிராந்தியத்தில் உள்ள மலையாள ரசிகர்களின் விருப்பத்தை கருத்தில் கொண்டு பிரத்யேக மலையாள உள்ளடக்கங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

இரண்டு வகையான சந்தா திட்டங்கள்

STARZPLAY-ன் ‘பிளஸ்’ திட்டத்தின் கீழ், மாதம் AED 34.99 கட்டணத்தில் ஜியோஹாட்ஸ்டாரின் பன்மொழி உள்ளடக்கங்களை ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.

அதேபோல், மாதம் AED 49.99 கட்டணத்தில் வழங்கப்படும் ‘மேக்ஸ்’ திட்டத்தில், ஜியோஹாட்ஸ்டாரின் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுடன் STARZPLAY-ன் விளையாட்டு உள்ளடக்கங்களையும் ஒரே சந்தாவில் குடும்பத்தினர் பயன்படுத்தும் வகையில் வழங்குகிறது. கிரிக்கெட் போட்டிகள் உள்ளிட்ட நேரடி விளையாட்டு நிகழ்ச்சிகளுடன் ஜியோஹாட்ஸ்டாரின் தொடர்கள், ஒரிஜினல் நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் திரைப்படங்களும் இதில் இடம்பெறும்.

ஜியோஸ்டார் நிறுவனத்தின் சர்வதேச வணிகப் பிரிவு தலைவர் அமித் மல்ஹோத்ரா கூறுகையில், இங்கிலாந்து, கனடா மற்றும் சிங்கப்பூரில் ஜியோஹாட்ஸ்டாருக்கு கிடைத்த வரவேற்பு, இந்திய பொழுதுபோக்கு உள்ளடக்கங்களுக்கு சர்வதேச அளவில் உள்ள வாய்ப்புகளை மீண்டும் நிரூபித்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், தெற்காசிய மக்கள் அதிக அளவில் வசிக்கும் MENA பிராந்தியம், ஜியோஹாட்ஸ்டாரின் உலகளாவிய OTT பயணத்தில் முக்கியமான அடுத்த கட்ட சந்தையாக இருப்பதாகவும், STARZPLAY உடனான கூட்டணி மூலம் இந்திய படைப்புகள், கலைஞர்கள் மற்றும் கலாச்சாரத்தை உலகளவில் கொண்டு செல்லும் முயற்சிக்கு புதிய வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

STARZPLAY நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி நாஸ் ஹரக், ஜியோஹாட்ஸ்டாரை தங்கள் தளத்துடன் இணைப்பதன் மூலம், இந்தியாவின் சிறந்த பொழுதுபோக்கு படைப்புகளையும் MENA பிராந்திய ரசிகர்களின் தேவைகளையும் ஒரே தளத்தில் இணைக்க முடியும் என்று தெரிவித்தார். குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் தங்களுக்கு விருப்பமான உள்ளடக்கங்களை ஒரே தளத்தில் கண்டுகளிக்கும் வகையில் STARZPLAY-ஐ உருவாக்குவதே தங்களது நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

புர்ஜ் கலீஃபாவில் பிரம்மாண்ட அறிமுகம்

MENA பிராந்தியத்தில் ஜியோஹாட்ஸ்டாரின் வருகையை முன்னிட்டு, உலகப் புகழ்பெற்ற புர்ஜ் கலீஃபா கட்டிடம் சிறப்பு கொண்டாட்டக் களமாக மாறியது. ஜியோஹாட்ஸ்டாரின் அடையாளமான ‘பிக் பாங்’ உள்ளிட்ட காட்சிகள் புர்ஜ் கலீஃபாவில் ஒளிர, துபாய் நகரின் மையப்பகுதி முழுவதும் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது.

ஜியோஹாட்ஸ்டார் தொடர்ந்து AI அடிப்படையிலான தனிப்பட்ட பரிந்துரைகள், உரையாடல் மூலம் தேடும் வசதி மற்றும் இன்டராக்டிவ் உள்ளடக்கங்கள் உள்ளிட்ட புதிய தொழில்நுட்ப முயற்சிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இங்கிலாந்து, கனடா மற்றும் சிங்கப்பூரைத் தொடர்ந்து தற்போது MENA பிராந்தியத்திலும் கால் பதித்துள்ள ஜியோஹாட்ஸ்டார், ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் தனது சர்வதேச சேவையை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது.

 

JioHotstar Expands into the MENA Region, Strengthening Its Global Streaming Footprint

Partners with STARZPLAY to bring its extensive Indian entertainment library to audiences across the Middle East and North Africa

Chennai, October 6, 2026: JioHotstar, one of India’s leading streaming platforms, has announced its entry into the Middle East and North Africa (MENA) region as part of its next phase of international expansion.

Following its presence in the UK, Canada and Singapore, JioHotstar is now extending its multilingual entertainment offering to the MENA region, home to a large South Asian audience. As part of this expansion, JioHotstar has partnered with STARZPLAY, with the platform available as a dedicated section on the STARZPLAY app and website.

Through the partnership, audiences across MENA will be able to enjoy new JioHotstar Originals alongside their India releases, with audio support available in up to 10 languages.

The offering will also include popular television programmes from JioStar’s network, blockbuster films and some of India’s most popular reality shows, including the upcoming season of Koffee With Karan and Bigg Boss, available across multiple languages. The content library will span languages including Hindi, Tamil, Malayalam, Telugu and Bengali. Special Malayalam content has also been added, keeping in mind the significant Malayalam-speaking audience in the MENA region.

Two Subscription Plans for MENA Audiences

Under STARZPLAY’s Plus plan, audiences can access JioHotstar’s multilingual content for AED 34.99 per month.

The Max plan, priced at AED 49.99 per month, combines JioHotstar’s entertainment offering with STARZPLAY’s sports portfolio under a single subscription. The plan brings together live sports, including cricket, along with JioHotstar’s daily series, Originals, reality shows and movies, offering South Asian audiences a comprehensive entertainment experience.

Speaking about JioHotstar’s expansion into the MENA region, Amit Malhotra, Head of International Business at JioStar, said that the strong response received by JioHotstar in the UK, Canada and Singapore has demonstrated the growing global demand for Indian entertainment.

He described MENA as an important next market in JioHotstar’s journey towards becoming a global OTT platform, noting that the partnership with STARZPLAY will provide an opportunity to bring JioHotstar’s extensive entertainment offering—from Originals and daily television series to blockbuster films and popular reality shows—to audiences across the region.

Nash Harik, Chief Executive Officer of STARZPLAY, said the partnership brings together high-quality entertainment and a deep understanding of regional audiences. He added that integrating JioHotstar into the STARZPLAY platform represents a long-term investment in the future and will bring together India’s finest content with STARZPLAY’s understanding of audiences across the region.

He further highlighted the strong connection STARZPLAY has established with South Asian audiences across the region through cricket and said the partnership with JioHotstar will expand that relationship beyond sports into everyday family entertainment.

JioHotstar Makes a Grand Debut at Burj Khalifa

Marking JioHotstar’s arrival in the MENA region, the iconic Burj Khalifa in Dubai was transformed into a spectacular celebration venue.

The JioHotstar logo and signature ‘Big Bang’ visual illuminated the world’s tallest building, creating a striking display visible across the city. The projection marked the arrival of JioHotstar and STARZPLAY’s combined offering in the region.

JioHotstar continues to enhance the streaming experience through innovations such as AI-powered personalised recommendations, conversational search and interactive content, along with new engagement and commerce opportunities.

Following its successful expansion into the UK, Canada and Singapore, JioHotstar has now established its presence in MENA, further strengthening its international footprint across Europe, North America, Asia and the Middle East.