
சமையல் களத்தில் வைல்டு கார்டு என்ட்ரி கொடுக்கும் ஜூலி! ‘Celebrity MasterChef Tamil’ நிகழ்ச்சியில் சுவாரஸ்யமான திருப்பம்!
சமையல் போட்டியில் புதிய சவால்களை எதிர்கொள்ளத் தயாராகும் ஜூலி – நடுவர் சமந்தா ரூத் பிரபுவுடன் உருவாகும் எதிர்பாராத பிணைப்பு!
‘Celebrity MasterChef Tamil’ நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக ஜூலி களமிறங்குகிறார். ஏற்கெனவே பல்வேறு அனுபவங்களைச் சந்தித்துள்ள ஜூலிக்கு, இந்த முறை சமையல் களத்தில் தனது திறமையை நிரூபிப்பதற்கான புதிய வாய்ப்பு கிடைத்துள்ளது. கடுமையான போட்டிகள், குறைந்த நேரத்தில் உணவு தயாரிக்கும் சவால்கள் என நிகழ்ச்சியின் அடுத்தடுத்த கட்டங்கள் ரசிகர்களுக்கு விறுவிறுப்பான அனுபவத்தை அளிக்க உள்ளன.
இந்தப் போட்டியில் ஜூலியின் பங்கேற்பு கூடுதல் கவனம் பெறுவதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. அவர் தனது முதல் குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், நிகழ்ச்சியின் நடுவரான சமந்தா ரூத் பிரபுவும் தாய்மையை நோக்கிய வாழ்க்கையின் புதிய கட்டத்தில் இருப்பதாக நிகழ்ச்சித் தொகுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே இயல்பான புரிதலும் சுவாரஸ்யமான உரையாடல்களும் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கர்ப்பகாலத்தில் ஏற்படும் உணவு ஆசைகள், மாறும் சுவைகள், அன்றாட அனுபவங்கள் எனப் பல விஷயங்கள் இருவரையும் நெருக்கமாக்கலாம். அதே நேரத்தில், சமந்தா நடுவர் பொறுப்பில் இருப்பதால், ஜூலியின் உணவுகளுக்கு அவர் எவ்வாறு மதிப்பெண்கள் வழங்குவார் என்பதும் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டுகிறது.
இதுகுறித்துப் பேசிய ஜூலி, தனது வாழ்க்கையின் முக்கியமான காலகட்டத்தில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டார். சமந்தாவும் இதேபோன்ற வாழ்க்கை அனுபவத்தைக் கடந்து வருவது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறிய அவர், அதற்காகப் போட்டியில் தனக்கு எந்தச் சலுகையும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார். சமையல் மூலம் தன்னைச் சவாலுக்கு உட்படுத்தி, நடுவர்களைத் தனது உணவுகளால் ஆச்சரியப்படுத்துவதே தனது நோக்கம் என்றும் அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் சமந்தா ரூத் பிரபுவுடன் செஃப் வெங்கடேஷ் பட், செஃப் சாஷி மற்றும் செஃப் ஷ்ரேயா அட்கா ஆகியோரும் நடுவர்களாகப் பங்கேற்று போட்டியாளர்களின் உணவுகளை மதிப்பீடு செய்ய உள்ளனர். அனுபவம் வாய்ந்த நடுவர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்து, மற்ற போட்டியாளர்களுக்கு மத்தியில் தனக்கான இடத்தைப் பிடிப்பது ஜூலிக்கு முக்கியமான சவாலாக இருக்கும்.
ஒருபுறம் தாய்மையை எதிர்நோக்கும் மகிழ்ச்சி; மறுபுறம் சமையல் போட்டியின் அழுத்தம். இந்த இரண்டையும் சமாளித்து ஜூலி எவ்வாறு முன்னேறப் போகிறார்? சமந்தாவுடனான அவரது சந்திப்பு போட்டிக்கு வெளியே அன்பான தருணங்களை உருவாக்குமா, அல்லது நடுவர் இருக்கையில் சமந்தா தனது கண்டிப்பான அணுகுமுறையையே தொடர்வாரா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
‘Celebrity MasterChef Tamil’ நிகழ்ச்சியை Sony VIZHA மற்றும் Sony LIV தளங்களில் காணலாம்.

Julie Enters Celebrity MasterChef Tamil as a Wildcard Contestant, Bringing a New Twist to the Competition!
Expectations Rise as Julie Prepares for Motherhood and Shares an Unexpected Connection with Judge Samantha Ruth Prabhu
Celebrity MasterChef Tamil is set to witness an exciting new turn with Julie entering the competition as a wildcard contestant. Known for her energetic personality, Julie is now ready to take on a fresh challenge in the culinary arena. From tackling demanding cooking tasks to preparing dishes within strict time limits, she will have to put her culinary skills to the test and prove her mettle among the contestants.
Julie’s entry into the show has an added personal touch. She is expecting her first child, while the show’s judge, Samantha Ruth Prabhu, is also said to be entering a new phase of motherhood. Their shared experiences could pave the way for a special connection, bringing warmth and interesting conversations to the competition.
From pregnancy cravings and changing food preferences to the little joys of this phase of life, the two may find plenty of common ground. However, with Samantha sitting on the judges’ panel and Julie competing for a place in the contest, it remains to be seen how their personal connection will play out on the show.
Speaking about her participation, Julie said that being part of Celebrity MasterChef Tamil at this important stage of her life makes the experience even more special. She expressed happiness at knowing that Samantha is going through a similar phase of life, adding that it feels reassuring to have someone who can understand her food cravings and experiences.
However, Julie made it clear that she is not expecting any special treatment or easy scores from Samantha. Instead, she is entering the competition with the determination to challenge herself through cooking, showcase her abilities and surprise the judges with her dishes.
Alongside Samantha Ruth Prabhu, Chef Venkatesh Bhat, Chef Sashi and Chef Shreya Adka will evaluate the contestants’ culinary creations. With a panel of experienced judges setting high standards, Julie will have to demonstrate consistency, creativity and skill to establish herself in the competition.
Will Julie’s entry lead to heartwarming moments between two women sharing similar life experiences? Or will Samantha maintain her strict judging standards while evaluating Julie’s dishes? The upcoming episodes promise an interesting mix of culinary challenges, personal moments and competitive excitement.
Watch Celebrity MasterChef Tamil on Sony VIZHA and Sony LIV.
