Friday, April 17
Shadow

காலா பட நடிகை சாக்ஷி அகர்வால் பிறந்த நாள் பதிவு

சென்னையில் பிறந்த இவர் தமிழ், கன்னட படங்களில் நடித்துள்ளார். சென்னையில் தனது எஞ்சினியரிங் படிப்பை முடித்த இவர், பெங்களுரில் எம்பிஏ படிப்பை முடித்தார்.

கல்யான் சில்க்ஸ், சக்தி மசாலா மலபார் கோல்ட் உள்ளிட்ட பல்வேறு விளம்பரங்களில் இவர் நடித்துள்ளார்.

இவர் ‘கவிதாவும் கண்ணதாசனும் காதலிக்க போறாங்க’ படத்தில் 10 வேடத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தின் சுருக்கம் ‘கககபோ’ என்பதாகும்.

இவர் ஜான்சி ராணி, கிளியோபாட்ரா முதல் 2025ம் ஆண்டின் நவீன பெண் என 10 வேடங்களில் நடனமாடியுள்ளார்.

அஜித்தின் தீவிர ரசிகையான இவர், “அவருடைய படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால், அதை விட பெரியது எனக்கு எதுவும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.