மூன்று படங்கள் மூலமாக தொடர்ந்து ஆச்சர்யப்படுத்த இருக்கும் சாக்ஷி அகர்வால்!!
ஒரு படத்தில் ஒரு நடிகை வந்துபோகும் நேரம் முக்கியம் அல்ல. அவர் ஏற்படுத்திச் செல்லும் பதிவு தான் முக்கியம். தான் நடிக்கும் படங்களில் சிறப்பான பதிவையும் ரசிகர்களின் மனதில் ஒர் அதிர்வையும் ஏற்படுத்திச் செல்லும் வேட்கையோடு கோடம்பாக்கத்தில் அசத்தி வருகிறார் சாக்ஷி அகர்வால். இவர் அறிமுகம் தேவை இல்லாத திருமுகம். காலா படத்தில் சிறப்பாக பங்காற்றிய சாக்ஷி கையில் இப்போது இருப்பது இரண்டு பெரிய படங்கள். ராய்லட்சுமி நடிப்பில் தயாராகியுள்ள சின்ட்ரெல்லா படத்தில் சாக்ஷி அகர்வாலுக்கு முக்கியக் கேரக்டர். மேலும் இயக்குநர் எழில் இயக்க ஜீவி பிரகாஷ் நடிக்கும் காமெடி கலந்த ஹாரர் படத்திலும் சாக்ஷி அகர்வால் ஒன் ஆப் த ஹீரோயின். ஏற்கெனவே இவர் மலையாளத்தில் பிஜுமேனன் ஜோடியாக நடித்த படம் இவருக்கு பெரிய அங்கீகாரமாக அமைந்துள்ளது. கூடுதல் செய்தியாக திருமணம் எனும் நிக்காஹ் படத்தை இயக்கிய அணீஸ் இயக்கவிருக்கும் புத...



