
சினிமாவை பொறுத்தவரை காற்று உள்ளபோதே தூற்றி கொள் என்பார்கள் ஆனால் அதுக்கு விதிவிலக்கு நம் ஓவியா படவாய்ப்பு இல்லாமல் இருந்த ஓவியாவுக்கு பட வாய்ப்புகள் வந்தாலும் அதை பயன்படுத்திக்கொள்ள தெரியவில்லை.

பிக் பாஸ் மூலம் பிரபலமான ஓவியாவுக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் கிடைத்தாலும், அவர் கேட்கும் சம்பளத்தால் தயாரிப்பாளர்கள் தலைதெறிக்க ஓடுகிறார்களாம். இதனால், தற்போதுவரை ஓவியா ‘காஞ்சனா 3’ படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். இப்படத்தை தவிர வேறு எந்த படங்களும் அவர் கையில் இல்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே ஞானவேல்ராஜா தயாரிப்பில் டிகே இயக்கும் ‘காட்டேரி’ படத்தில் தெலுங்கு நடிகர் சாய் மகன் ஆதி ஹீரோவாகவும், ஓவியா ஹீரோயினாகவும் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இப்படத்தில் ஆதிக்கு பதிலாக வைபவ் ஹீரொவாக்கப்பட்டதோடு, ஓவியாவுக்கு பதில் ஹன்சிகாவை ஹீரோயினாக்கியுள்ளனர்.
பட வாய்ப்புகள் குறைந்து வருவதால் தனது சம்பளத்தை குறைத்துக் கொண்ட ஹன்சிகா, தற்போது யாருக்கு ஜோடியாகவும் நடிக்க சம்மதம் தெரிவித்து வருகிறாராம்.
