Friday, October 4
Shadow

டைட்டானிக் கதையின் உல்டா புல்டா!

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சி வி குமார் தயாரிப்பில் உருவாகி வரும் ‘டைட்டானிக் – காதலும் கவுந்து போகும்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன் வெளியாகி அனைவரிடமும் அமோக வரவேற்பை பெற்ற ‘மாயவன்’ படத்தைத் தொடர்ந்து ‘4ஜி’ மற்றும் ‘டைட்டானிக் – காதலும் கவுந்து போகும்’ ஆகிய படங்களைத் தயாரித்து வருகிறார் சி.வி.குமார். இதன் இரண்டு படங்களின் இறுதிக்கட்டப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதில் ‘டைட்டானிக் – காதலும் கவுந்து போகும்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ளது படக்குழு. ஜானகிராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கலையரசன், ஆனந்தி, ஆஷ்னா, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பாலு, இசையமைப்பாளராக நிவாஸ் கே.பிரசன்னா, எடிட்டராக க்ரிஷ் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

Leave a Reply