Friday, March 13
Shadow

சூர்யாவுடன் மோதும் த்ரிஷா

த்ரிஷா தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் தென் இந்தியாவின் முன்னனி கிட்டத்தட்ட பத்து வருடங்கள் மேல் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துள்ளார். இதுவரை கவர்ச்சியை நம்பிய த்ரிஷா தன் பாதையை மாற்றியுள்ளார் என்று தான் சொல்லணும். நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் தான் நடிப்பேன் என்று சொன்ன த்ரிஷா அதை செய்யவும் ஆரம்பித்துள்ளார் அதன் அடிப்படையில் தான் அவரின் மோகினி படக்கதையும் முழு முழுக்க அவருக்கான அவர் திறமையை வெளிபடுத்தும் கதை தான்

நயந்தாராவை போல ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘மோகினி’ படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

ஆர்.மாதேஷ் இயக்கியுள்ள இப்படத்திற்கு டிரைலர் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதால், படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதே பொங்கலுக்கு தான் சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் ரிலிஸாக உள்ளது. சூர்யா படத்திற்காக அதிகமான தியேட்டர்களை கைப்பற்ற தயாரிப்பு தரப்பு முயற்சித்து வரும் நிலையில், அவர்களுக்கு போட்டியாக ‘மோகினி’ குழுவும் களத்தில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னணி நடிகர்களில் ஒருவராக சூர்யா இருந்தாலும், அஜித், விஜய் போன்ற ஹீரோக்கள் போல ஓபனிங் இல்லாதவர் சூர்யா, என்பதால் அவரது படத்துடன் திரிஷாவின் ‘மோகினி’ யை மோதவிடவும் முடிவு செய்துள்ளார்களாம்.

Leave a Reply