Friday, October 4
Shadow

ஆடு பகை குட்டி உறவு ஆச்சிரியத்தில் கோலிவுட்

தமிழ் சினிமாவில் அதிகமாக ஆளும் கட்சி அதிமுக வால் அதிகம் பாதிக்கபட்ட நடிகர் என்றால் அது கமல்ஹாசன் தான் என்று சொல்லணும் காரணம் கடந்த சில வருடங்களுக்கு முன் கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் ரிலீஸ்யில் அந்த அளவுக்கு சிரமங்களை அனுபவித்தார் என்று தான் சொல்லணும் இதனால் இந்த ஆளும் கட்சிக்கு எந்த விதமான ஆதரவு கொடுக்கமாட்டார். ஆனால் தற்போது அவரின் மகள் சுருதிஹாசன் செய்த காரியம் கொஞ்சம் எல்லோரையும் வியக்கவைக்கிறது.

டெங்கு ஒழிப்பு பிரச்சாரத்தில் கடந்த சில வருடங்களாகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது தமிழக அரசு. மழைக் காலங்களில், தியேட்டர்களில் இடைவேளையின்போது டெங்கு பற்றிய விழிப்புணர்வு விளம்பரப் படம் ஒளிபரப்பப்படும். தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை தான் இந்த விளம்பரத்தைத் தயாரிப்பார்கள்.

ஆனால், முதன்முறையாக நடிகை ஸ்ருதி ஹாசன் இந்த விளம்பரப் படத்தைத் தயாரித்துக் கொடுத்துள்ளார். “என்னுடைய நிறுவனத்தின் முதல் தயாரிப்பே பெருமைப்படக் கூடியதாக இருக்கிறது. சமூக விஷயங்களுக்காக என் குரல் நிச்சயம் ஒலிக்கும். இந்த விளம்பரம் நன்றாக வந்திருப்பதில் மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார். வரும் மழைக் காலத்தில் இருந்து திரையரங்குகளில் இந்த விளம்பரத்தைப் பார்க்கலாம்.
ஜெயலலிதா தலைமையிலான இதே அதிமுக அரசு தான் கமலின் ‘விஸ்வரூபம்’ படத்தை வெளியிட முடியாமல் ஏகப்பட்ட குடைச்சல் கொடுத்தது. அப்படி இருந்தும் அதிமுக அரசுக்காக ஸ்ருதி விளம்பரப் படம் தயாரித்துக் கொடுத்திருப்பது, பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

Leave a Reply