Sunday, November 3
Shadow

ஐஸ்வர்யா – சௌந்தர்யா இதில் சிறந்தவர்கள் யார்? தனுஷ் பதில்

ஐஸ்வர்யா, சவுந்தர்யாவில் யார் சிறந்த இயக்குனர் என்று தனுஷிடம் கேட்டதற்கு திறம்பட பதில் அளித்துள்ளார். தனுஷ் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படத்தை அவரின் மச்சினி சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். முன்னதாக தனுஷ் அவரின் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சினிமா பயணம் பற்றி தனுஷ் கூறும்போது நானாக சினிமா துறைக்கு வரவில்லை. என் குடும்பத்தார் என்னை கட்டாயப்படுத்தி வர வைத்துவிட்டனர். எனக்கு சினிமா பற்றி தெரியாததால் இந்த துறைக்கு வர விரும்பியது இல்லை

சினிமா தான் எனக்கு என்று கடவுள் எழுதியிருக்கிறார். சில ஆண்டுகள் கழித்து இது தான் என் தொழில் என்பதை புரிந்து கொண்டேன். நான் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன் என்கிறார் தனுஷ்.

தனுஷ் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன், மயக்கம் என்ன ஆகிய படங்களிலும், தந்தை கஸ்தூரி ராஜா இயக்கத்தில் ட்ரீம்ஸ் படத்திலும், மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் 3 படத்திலும், மச்சினி சவுந்தர்யா இயக்கத்தில் விஐபி 2 படத்திலும் நடித்துள்ளார்.

ஐஸ்வர்யா, சவந்தர்யா இயக்கத்தில் நடித்துள்ளீர்கள், சகோதரிகளில் யார் சிறந்த இயக்குனர் என்று தனுஷிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறும்போது, இருவருமே திறமையானவர்கள். இருவரும் சூப்பர் ஸ்டாரின் மகள்கள், கலை நுணுக்கம் அறிந்தவர்கள் என்றார்

Leave a Reply