பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடக்கவில்லை என்றும் அதே நேரத்தில் முதல்கட்ட படப்பிடிப்பிலேயே திட்டமிட்ட பட்ஜெட்டை விட மூன்று மடங்கு செலவானதால் இந்த படத்தினை தொடர லைகா நிறுவனம் விரும்பவில்லை என்றும் தகவல் வந்தது.

350 கோடி பட்ஜெட்டில் இந்த படம் தயாரிக்கவிருந்தது. ஆனால் முதல்கட்ட படப்பிடிப்பின் பாதிகூட முடியாததால் லைகா நிறுவனம் அதிருப்தி தெரிவித்தது. மேலும் படத்தின் நாயகன் கமல் தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக இறங்கியுள்ளார். இதனால் படத்தின் படப்பிடிப்பும் தாமதமாகிக்கொண்டே இருப்பதால் அதிருப்தி அடைந்த லைகா நிறுவனம் இந்த படத்தில் இருந்து ஒதுங்க முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்தியன்2 முற்றிலுமாக கைவிடப்படும் என்று தெரிகிறது.

இந்த படத்தில் கமல்ஹாசன் தவிர, காஜல் அகர்வால், நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ் மற்றும் சில நடிகர்கள் நடிப்பதாக இயக்குனர் ஷங்கர் உறுதி செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related