
சமீபகாலமாக தமிழக அரசியல் குறித்து ட்விட்டரில் கருத்து கூறி வந்த நடிகர் கமல்ஹாசன், தற்போது பொது நிகழ்ச்சிகளிலும், தொலைக்காட்சி பேட்டிகளிலும் அரசியல் குறித்து பேசி வருவதோடு, தனது ரசிகர்களை அரசியலில் ஈடுபடுமாறும் கூறி வருகிறார். இதனால் கமல் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் பேசும் போது மக்களை தயாருகுங்கள் ஒட்டு போடா தயாருகுங்கள் என்று கூறினார் அது மட்டும் இல்லாமல் கொஞ்சம் சூசமாக அவர் அரசியல் வருவதை சொல்லிவிட்டார் அதோடு எனக்கு ஒட்டும் போடுங்க என்றும் சொல்லிவிட்டார்.
அதே சமயம், அதிமுக அரசை கடுமையாக விமர்சித்து வரும் கமல்ஹாசன், திமுக-வுக்கு ஆதரவாக செயல்படுவதாக, அதிமுக அமைச்சர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில், கமல்ஹாசன் எந்த அரசியல் கட்சியில் இணையப் போகிறார், என்பது குறித்து பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி ஆருடம் கூறியுள்ளார்.
அதாவது, கோழிக்கோட்டில் நடக்க உள்ள மார்க்கசிஸ்ட் கட்சியின் செமினார் ஒன்றில் கமல்ஹாசன் பங்கேற்க உள்ளார். அந்த தகவலை அடிப்படையாக வைத்து, கமல் கம்யூனிஸ்ட் கட்சியில் இணையப் போவதாக சுப்பிரஅனியன் சுவாமி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுட்டுள்ளார்.
”பாம்பஸ் இடியட்” என கமலை திட்டி, அவர் மார்க்சிஸ்ட்
