
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ரஜாத் ரவிஷங்கர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் கார்த்தி 17 என கூறப்படும் தேவ். சமீபத்தில் இப்படத்தின் பிரத்யேக புகைப்படங்கள் வெளியாகி சமூக ஊடகங்களில் பெரிதும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
வரும் டிசம்பர் மாதம் வெளியாகவிருக்கும் இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். மேலும் பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்ற நடிகர்கள் தேவ் படத்தில் முக்கிய பாத்திரத்தில் உள்ளனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தின் டீஸர் வெளியாகி சமூக ஊடங்கங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. டீஸரில் நடிகர் கார்த்தி தோன்றும் காட்சிகள் அவரது நடிப்பின் மற்றோரு பரிமானத்தை வெளிப்படுத்துகிறது.
கடைக்குட்டி சிங்கம் படத்தில் கிராமத்து இளைஞனாக மீசையுடன் விவசாயி பாத்திரத்தில் தோன்றிய கார்த்தி, தேவ் படத்தில் கிளாஸான தோற்றத்தில் இருக்கிறார். கார்த்தி நடிக்கும் அனைத்து படங்களும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் படங்களாக இருப்பதால், தேவ் படமும் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது.
