Saturday, December 10
Shadow

கட்டப்பாவ காணோம்- திரைவிமர்சனம் Rank 1.5/5

சென்ற வாரம் தமிழ் சினிமாவுக்கு நல்ல வாரம் என்று தான் சொல்லணும் அப்ப இந்த வாரம் என்ன என்று கேக்குறிங்க கொஞ்சம் சறுக்கல் என்று தான் சொல்லணும் காரணம் போன வாரம் வந்த மூன்று படங்களில் இரண்டு படங்கள் மிக சிறந்த படங்கள் என்று சொல்லணும் ஆனால் இந்தவாரம் நான்கு படங்கள் ரிலீஸ் இதில் இரண்டு படங்கள் சுமார் ரகம் மீதி ஹ்ம்ம் சரி மேட்டர்க்கு வருவோம் இந்த வார ரிலீஸ்யில் நாம் பாக்க போரபடம் கட்டப்பாவ காணோம்.

சினிமாவில் பல கதைகளை நாம் பார்த்து இருப்போம் ஆனால் இந்த படத்தில் புதுசா மீனை வைத்து கதை சொல்ல போறோம் என்று கதை சொல்லி இருகிறார்கள் என்ற ஆர்வம் அதிகமாக திரையரங்கத்துக்குள் போனால் மிகுந்த ஏமாற்றம் அரவனா என்பது ஒரு வாஸ்து மீன் இந்த மீன் சீனாவை சேர்ந்த மீன் இந்த மீன் இருந்தால் வீட்டில் நல்லது நடக்கும் என்று பலர் இந்த மீனை வளகுகிறார்கள். அதை மையமாக தான் இந்த படத்தின் கதையும் ஆக மீன் எதோ வித்தைகள் எல்லாம் பண்ணும் கிராபிக்ஸ்ல புதுசா எதோ பெருசா என்று எல்லாம் இருக்கும் என்றால் ஏமாற்றம் தா சரி வாங்க கதைக்கு போகலாம்.

இந்த படத்தில் சிபி சத்யராஜ் ,ஐஸ்வர்யா ராஜேஷ் காளி வெங்கட் சேது சாந்தினி சித்ரா லக்ஷ்மணன் களவாணி திருமுருகன் டாடி சரவணன் லிவிங்ஸ்டன் மற்றும் பலர் நடிப்பில் இந்த படம் உருவாகி இருக்கிறது படத்துக்கு இசை சந்தோஷ் தயாநிதி ஒளிப்பதிவு ஆனந்த ஜீவா படத்தின் இயக்குனர் அறிமுக இயக்குனர் மணி செய்யோன் இயக்கத்தில் வெளியாகி உள்ள படம்.

சிறுவயதில் இருந்தே ராசியில்லாத பையன் என்ற அடைமொழியோடு வளர்ந்து வருகிறார் நாயகன் சிபிராஜ். இவருடைய அப்பா சித்ரா லட்சுமண் பல தொழில்களை செய்தும் நஷ்மடைந்து கடைசியில் ஜோசியராக மாறிவிடுகிறார். இந்நிலையில், சிபிராஜ் ஒருநாள் நாயகி ஐஸ்வர்யாவை கிளப்பில் பார்க்கிறார்.

இருவரும் ஒருவருக்கொருவர் பேசி நெருக்கமாகிறார்கள். ஐஸ்வர்யா தன்னிடம் தான் ராசியில்லாத பையன் என்று கூறும் சிபிராஜுடைய அப்பாவித்தனம் பிடித்துப்போக, அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார் ஐஸ்வர்யா. ஒருகட்டத்தில் இருவரும் காதலர்களாகிறார்கள்.

திருமணம் செய்ய ஆசைப்படும் இவர்களுக்கு ஜோசியத்தின் மீது நம்பிக்கையுள்ள சித்ரா லட்சுமணனோ ரெண்டுபேருக்கும் ராசி சரியில்லை என்று திருமணத்துக்கு தடை போடுகிறார். இருப்பினும், அதை பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் இரண்டுபேரும் திருமணம் செய்துகொள்கிறார்கள். தனியாக வீடு பிடித்து குடியும் போகிறார்கள்.

இந்நிலையில், மிகப்பெரிய தாதாவான மைம் கோபியும் ஜோசியத்தின் மீது நம்பிக்கையுடையவராக இருக்கிறார். இவர் கட்டப்பா என்று வாஸ்து மீனை வளர்த்து வருகிறார். அதனால்தான் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் இருந்து வருகிறார்.

இந்நிலையில், அந்த மீனை யோகி பாபு திருடிச் சென்றுவிடுகிறார். திருடிச் சென்றவர் அந்த மீனை தண்ணி லாரியில் போட்டுவிடுகிறார். கடைசியில் அந்த மீன், வளர்ப்பு மீன்கள் கடை வைத்திருக்கும் லிவிங்ஸ்டன் வசம் சென்றுவிடுகிறது. ஏர்ஹோஸ்டசான சாந்தினி, தனது சிறுவயது தோழனான சிபிராஜுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக அந்த வாஸ்து மீனை வாங்கிக் கொண்டு, சிபிக்கு பரிசாக கொடுக்கிறாள். அதேநேரத்தில், காணாமல் போன வாஸ்து மீனை திருடியவனை தனது ஆட்களை விட்டு தேடி வருகிறார் மைம் கோபி.

இறுதியில், அந்த வாஸ்து மீன் மைம் கோபியின் கைக்கு கிடைத்ததா? சிறு வயதில் இருந்தே ராசியில்லாத பையன் என்று வளர்ந்த சிபிராஜ் கையில் கிடைத்த வாஸ்து மீன் அவருக்கு ராசியை கொடுத்ததா? வாஸ்து மீன் தனது கைக்கு வந்தபிறகு சிபிராஜின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் எல்லா கதாபாத்திரமும் திணிக்க பட்டதாகவே தெரிகிறது சப்ரைஸ் சாந்தினி யோகி பாபு போன்ற கதாபாத்திரம் எதுக்கு என்பது போல தான் தெரிகிறது அது மட்டும் இல்லை படத்தின் இயக்குனர் பல இடங்களில் குழம்பி நம்மளையும் குழப்பியுள்ளார் என்று தான் சொல்லணும். திரை கதையில் மிக பெரிய குழப்பம் மீனா இல்லை சிபிராஜ் ஐஸ்வர்யா காதலா இல்லை தேவை இல்லாமல் இருக்கும் கொட்டத்தை வைத்து காமெடி யா என்று அவரும் குழம்பி ரசிகர்களையும் குழப்பு உள்ளார் என்று தான் சொல்லன்னும் அது மட்டும் இல்லாமல் தேவையில்லாமல் இரட்டை அர்த்த வசனங்கள் ஹீரோ சிபிராஜை உப்பு சப்பு இல்லாமல் உபயோகித்துள்ளார். என்று தான் சொல்லணும். இப்ப தான் அவர் நல்ல ரோல்களை தேடி செய்து கொண்டு இருக்கும் நேரத்தில் மீண்டும் ஒரு தோல்வி என்று தான் சொல்லணும்.

படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மாடர்ன் பொண்ணாக வருகிறார்.குடிக்கிறார் கவர்ச்சியை காட்டுகிறார் தவிரவேறு புதுசா ஒன்னும் இல்லை சிறந்த நடிகையை பெருசா ஒன்னும் நடிக்கவைக்கவில்லை காதல் காட்சிகளில் புகுந்து விளையாடி உள்ளார் என்று தான் சொல்லணும் நானும் கவர்ச்சி மற்றும் மாடர்ன் பொண்ண நடிப்பேன் என்று சொல்லி இருக்கிறார் .

நல்ல காமெடி நடிகர்களை வைத்து ஒரு நல்ல நகைசுவை படமாக கொடுத்து இருக்கலாம் ஆனால் இயக்குனர் தவறவிட்டு விட்டார் .

மொத்தத்தில் ‘கட்டப்பாவ காணோம்’ காமெடி என்று நாமே சொல்லிக்கொண்டே இருக்கலாம் . Rank 1.5/5

Leave a Reply