Wednesday, October 28
Shadow

கவியரசு கண்ணதாசன் பிறந்த நாள்

இவர் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.

கண்ணதாசனுக்கு முதல் திருமணம் பொன்னழகி என்னும் பொன்னம்மா என்பவரோடு 1950 பிப்ரவரி 9 ஆம் நாள் காரைக்குடியில் நடைபெற்றது. இவர்களுக்கு கண்மணிசுப்பு, கலைவாணன், ராமசாமி, வெங்கடாசலம் ஆகிய 4 மகன்களும், அலமேலு சொக்கலிங்கம், தேனம்மை, விசாலாட்சி ஆகிய 3 மகள்களும் உள்ளனர். கண்ணதாசன் தனக்கு முதல் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே பார்வதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு காந்தி, கமல், அண்ணாதுரை, கோபால கிருஷ்ணன், சீனிவாசன் ஆகிய 5 மகன்களும், ரேவதி, கலைச்செல்வி ஆகிய 2 மகள்களுமாக ஏழு குழந்தைகள் உள்ளனர். ஐம்பதாவது வயதில் புலவர் வள்ளியம்மை என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விசாலி என்னும் மகள் ஒருவர் உள்ளார்.

கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இவர் பாரதியாரை மானசீகக் குருவாகக் கொண்டவர்.

அண்ணாவின் திராவிட கழகத்தில் இருந்த கண்ணதாசன் 1961 ஏப்ரல் 9 இல் கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து வெளியேறினார்.

உடல்நிலை காரணமாக 1981, ஜூலை 24ல் சிகாகோ நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை இந்தியநேரம் 10.45 மணிக்கு இறந்தார். அக்டோபர் 20இல் அமெரிக்காவிலிருந்து அவரது சடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, லட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் அக்டோபர் 22இல் எரியூட்டப்பட்டது.

இவர் கதை எழுதிய திரைப்படம்: ராஜா தேசிங்கு

இவர் வசனம் எழுதிய திரைப்படங்கள்: நாடோடி மன்னன், மகாதேவி

இவர் கதை, வசனம் எழுதிய திரைப்படம்: மதுரை வீரன்

இவர் எழுதிய திரைப்படப் பாடல்கள்:

விசுவநாதன்- இராமமூர்த்தி இசையில் மகாதேவி படத்தில் “கண் மூடும் வேளையிலும்”, “தாயத்து தாயத்து”, “சிங்காரப் புன்னகை”, “குறுக்கு வழியில்”, “மானம் ஒன்றே பெரிதென”, “சேவை செய்வதே ஆனந்தம்”.

சிவகெங்கைச் சீமை படத்தில் “சிவகெங்கைச் சீமை”, “சாந்துபொட்டு தழதழங்க”, “வீரர்கள் வாழும்”, “தென்றல் வந்து வீசாதோ”, “கண்ணங்கறுத்த கிளி”, “கனவு கண்டேன்”, “மருவிருக்கும் கூந்தல்”, “வைகை பெருகிவர”, “தனிமை நேர்ந்ததோ”, “கொட்டு மேளம் கொட்டுங்கடி”, “சின்னச்சின்ன சிட்டு சிவகங்கய”, “முத்து புகழ் படைத்த”
“ஆலிக்கும் கைகள்”, “மேகம் குவிந்ததம்மா”, “விடியும் விடியும் என்றிருந்தோம்”

மன்னாதி மன்னன் படத்தில் “அச்சம் என்பது மடமையடா”, “அவளா இவளா தேர்ந்தெடு”, “கண்கள் இரண்டும் உன்னை”, “காடு தழைக்க”
“காவேரி தாயே”, “காதற் கொழுநன்”, “கலையோடு கலந்தது உண்மை”, “கனிய கனிய மழலைபேசும்”, “நீயோ நானோ”, “பாடுபட்ட தண்ணலே”, “தண்டை கொண்டு”

பாசம் படத்தில் “சல் சல் எனும் சலங்கை”, “பால் வண்ண பருவம்”, “மாலையும் இரவும்”, “தேரெது சிலையெது”, “உலகம் பிறந்தது எனக்காக”, “உறவெ சொல்ல ஒருவருண்டு”, “வேங்கைக்கு குறிவைத்து”
கே. வி. மகாதேவன் இசையில் தாய் சொல்லை தட்டாதே படத்தில் “காட்டுராணி”, “காட்டுக்குள்ளே திருவிழா”, “ஒருத்தி மகனை”
“பாட்டு ஒரு பாட்டு”, “பட்டுச் சேலை காத்தாட”, “பூ உறங்குது”, ” போயும் போயும் “, “சிரித்து சிரித்து”

தாயைக்காத்த தனயன் படத்தில் “காட்டு ராணி கோட்டையிலே”, “காவேரி கரையிருக்கு”, “கட்டித் தங்கம் வெட்டியெடுத்து”, “மூடித் திறந்த இமைகள்”, “நடக்கும் என்பர்”, “பேரைச் சொல்லலாமா”, “சண்டிக் குதிரை நொண்டிக் குதிரை”

இளையராஜா இசையில் மூன்றாம் பிறை படத்தில் “கண்ணே கலைமானே”, “பூங்காற்றே” பாடல்கள்