
ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2004இல் அரசியலில் சேருவதற்கு முன்னர் 186 திரைப்படங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். அதிரடி திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக இவர் தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுகிறார். 1991ல் வெளியான கார்தவ்யம் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான இந்திய தேசிய திரைப்பட விருதினை வென்றார். சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருதினை ஐந்து முறையும், ஆந்திர மாநில அரசின் நந்தி விருதினை நான்கு முறையும் வென்றுள்ளார். மேலும் தென்னிந்திய வாழ்நாள் சாதனையாளருக்கான பிலிம்பேர் விருதையும் வென்றுள்ளார்.
சென்னையில் விஜயசாந்தியின் பெற்றோர்கள் ஆந்திர மாநிலத்தின் கோதாவரி மாவட்டத்தின் ராஜமுந்திரியைச் சேர்ந்தவர்கள். ஆயினும் இவர்கள் ஆந்திராவின் வாராங்கல் மாவட்டத்தில் ராமாங்குடம் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். இவர் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்குவதற்கு முன்பு சென்னையில் ஹோலி ஏஞ்சல்ஸ் உயர்நிலைப் பள்ளியில் தனது பத்தாம் வகுப்பு கல்வியை பூர்த்தி செய்தார். விஜயசாந்தி ஆந்திராவைச் சேர்ந்த எம். வி. சீனிவாச பிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர் நடித்த தமிழ் திரைப்படங்கள்
கல்லுக்குள் ஈரம், ராஜாங்கம், நெஞ்சில் துணிவிருந்தால், சந்தன மலர்கள், சிவப்பு மல்லி, இளஞ்ஜோடிகள்,மஞ்சள், நிழல் தொடும் நெஞ்ச்ங்கள், வேடிக்கை மனிதர்கள், நீரு பூத்த நெருப்பு, வில்லியனூர் மாதா, தலைமகன், கல்யாண கனவுகள், சூரியோதயம், ராஜஸ்தான், ஸ்ரீ பண்ணாரி அம்மன், மன்னன், ஆட்டோ ராணி, தடயம், போலீஸ் லத்தி சார்ஜ், அடிமை பெண், இந்திரு சந்திரு, நெற்றிக்கண், விஜயசாந்தி ஐபிஎஸ்
இவர் தயாரித்த படங்கள்
கர்த்தவ்யம், ஹிந்தியில் தேஜாஸ்வினி, தெலுங்கில் அதாவி சக்கா
