குருக்ஷேத்ரம் படத்தில் நடித்தது மிக பெரிய பாக்கியம் நடிகர் அர்ஜுன்
முனி ரத்னா எழுதி தயாரித்துள்ள குருக்ஷேத்ரம் படத்தினை இயக்குனர் நாகன்னா இயக்கியுள்ளார் . இப்படத்தை தமிழில் கலைப்புலி S தாணு வெளியிடும் பிரமாண்ட படைப்பு ஆகும் . இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது .
பத்திரிக்கையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் முனிரத்னா அவர்கள் பேசியவை
" இந்த விழாவில் நான் முதலில் நன்றி சொல்ல விரும்புவது கலைப்புலி எஸ் தானு அவர்கள். இந்த படத்தில் இடம் பெரும் இரண்டு சண்டைக் காட்சிகள் ஒன்று அர்ஜுன் இடம்பெறும் சண்டை, மற்றும் தர்சனின் சண்டை .இதை சண்டைப்பயிற்சி செய்தது 'கனல் கண்ணன்'. மகாபாரத கதையை பலவிதத்தில் எடுக்கலாம் .அந்த விதத்தில் நாங்கள் துரியோதனின் கதையை எடுத்திருக்கிறோம். இந்த மாதிரியான படம் கன்னட சினிமாவில் 80 வருடத்திற்கு முன் எடுக்கப்பட்டது .அதற்கு பிறகு கன்னடாவில் நாங்கள் இந்த படத்தினை எடுத்திருக்கிறோம். 3D மட்டும் 2 வருடங்கள் எடுக்கப்பட்டது....